மறைவு – 04.02.1950
வைத்தியவள்ளல், கருணைக் கடல்
ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் தந்தை பெரியாரின் அண்ணன் ஆவார். எந்த நேரமும் புன்முறுவல் பூத்த முகத்துடன் அன்போடு இரு கை நீட்டி வரவேற்று உபசரிக்கும் குணம் கொண்டவர். ஈரோட்டில் தனது இல்லத்தில் தனக்காக மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கவில்லை.
25 ஆண்டுகளாக அவர் வைத்திய சாலையில் மிகுந்த பற்றுக்கொண்டவராகவும், வெகு தாராளமாகச் செலவு செய்யக்கூடியவராகவும் இருந்துள்ளார்.
தந்தை பெரியார் அவர்கள் குமுறும் எரிமலை என்றால், பெரியாரின் அண்ணன் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் அமைதியான இமயமலை போன்றவர். அவருக்கு வைத்தியத்தில் திறமையும் ஆராய்ச்சியும் புலமையும் உண்டு. அவருடைய ஈரோட்டு வைத்தியசாலை தென்னாட்டிலேயே பேர் பெற்ற வைத்தியசாலை ஆகும். அன்னை நாகம்மையாரின் இடத்தை தக்க சமயத்தில் ஈடுசெய்தவர் இவரேயாகும். ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் 4.2.1950ஆம் ஆண்டு சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு ஈரோட்டில் தனது இல்லத்தில் இயற்கை எய்தினார்.