மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் 1902ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 26 ஆம் நாள் இரங்கூனில் பிறந்தார். இவர் பர்மாவிலே
கல்வி கற்றுபின் மேற் படிப்புக்காக சென்னை வந்தார்.
இவருடைய குடும்பம் செல்வந்தர் குடும்பம். தமிழ்நாட்டில் அவருடைய குடும்பம்தான் முதன்முதலில் கப்பலோட்டி
யது. பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், சீர்திருத்தக் கருத்துகளுக்காகவும் சுயமரி
யாதை இயக்கத்தோடு அணுக்கமான உறவில் இருந்தார். ஆனால் அதே நேரத்தில் ஆதி திராவிட மாநாடுகள், தாழ்த்தப்பட்டோருக்கான இயக்கங்களையும் கட்டி இருக்கிறார்.
1935இல் அம்பேத்கர் மதமாற்றத்தைப் பற்றிப் பேசுகின்றபோது அதற்கு ஆதரவு கொடுத்து ஆதிதிராவிட மாநாடுகளை நடத்தினார். இந்திய அரசியல் சட்டத்தை எழுதுவதற்கு அம்பேத்கரைச் சம்மதிக்க வைத்ததே இவர்தான்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயல்பட்டார். இந்தி எதிர்ப்புக் கூட்டங்கள் பலவற்றை தலைமையேற்று நடத்தியவர்.
1938இல் மறைமலை அடிகளார் அவர்களின் மகளான நீலாம்பிகை அம்மையாரின் தலைமையில் தமிழ்நாடு பெண்கள் மாநாடு நடைபெற்றது. அப்போதுதான் தந்தை பெரியாருக்கு ‘பெரியார்’ என்று பட்டம் கொடுக்கப்பட்டது. அந்தப் பட்டமளிப்பு விழாவில் முக்கியப் பங்காற்றியவர் மீனாம்பாள் சிவராஜ் அவர்கள்.
ஜாதியற்ற, சமத்துவ, பெண்ணுரிமைச் சமுதாயம் காண அரும்பெருந் தொண்
டாற்றிய அம்மையார் 30.11.1992இல் இயற்கையெய்தினார்.