தஞ்சை பெ. மருதவாணன்
தந்தை பெரியாரின்
மத எதிர்ப்பு முழக்கம்!
“குடிஅரசு’’ இதழுக்குத் தடை விதிக்கப்பட்டி-ருந்த இடைக்காலத்தில் “புரட்சி’’ என்ற பெயரில் ஓர் இதழைத் தந்தை பெரியார் நடத்தினார். “புரட்சி’’யின் தொடக்க இதழில் (26.11.1933) தந்தை பெரியார் எழுத்து வடிவில் எழுப்பிய மதஎதிர்ப்பு முழக்கங்கள் இவை! மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி! “மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி! மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி! மதமே மனித சமூக சமதர்மத்துக்கு விரோதி! மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்ற துணை! மதமே முதலாளி வர்க்கத்துக்குக் காவல்! மதமே சோம்பேறி வாழ்க்கைக்கு ஆதரவு! மதம் உழைப்பவனைத் தரித்திரத்தில் ஆழ்த்தி உழைக்காதவனை உச்சத்தில் வைப்பதற்கு உதவி! ஆகவே, மனித சமூகத்தில் சமதர்ம வாழ்க்கை ஏற்படுத்த மதங்களை முதலில் அழித்ததாக வேண்டும்.
“இந்துமதம்’’ மீது
அதிகக் கண்டனம் ஏன்?
அனைத்து மதங்களையும் வெறுக்கும் பெரியார் இந்துமதத்தின்மீது அதிகமாகக் கண்டனக் கணைகளை வீசுவது ஏன்? என்பதற்குரிய விளக்கத்தினை பேராசிரியர் தி. இராசகோபாலன் அவர்கள் கீழ்க்கண்டவாறு தெளிவுபடுத்துகிறார்.
யாரோ ஒருவன் எப்போதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு மொழியில் என்னமோ ஒரு உத்தேசத்தின்மீது சொன்னதாக யாராலோ எழுதிவைக்கப்பட்டதை ஒப்புக்கொண்டு பின்பற்றச் சம்மதிப்பதைவிட பெரிய அடிமைத்-தனம் வேறில்லை என்று மற்ற நாட்டு மதங்களின் மீது பெரியார் ஏவிய அம்புகளைப் போல இங்கர்சாலும், பெர்ட்ரண்ட் ரசலும்கூட ஏவவில்லை.
மற்ற மதங்களைக் காட்டிலும் சனாதன மதம் பெரியாரின் கைத்தடிக்கு அடிக்கடி ஆளாயிருப்பதற்குக் காரணம் உண்டு. மற்ற மதங்களில் வருணாசிரமப் பிறப்பு இழிவுகள் கிடையாது. உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடு இல்லை. இரண்டாவதாக மற்ற இரு மதங்களும் ஏகத்தை வணங்குபவர்களே தவிர அநேகத்தை வணங்குபவர்கள் அல்லர். இஸ்லாத்தில் உருவ வணக்கமே கிடையாது. மேலும் மற்ற மதங்களில் இல்லாத இனப்பகை வைதீக மதத்தில் இருந்ததால் அது பெரியாரால் அக்குவேறு ஆணி வேறாக அலசப்பட்டதே தவிர, எந்த மதத்தின்மீதும் அவருக்குப் பரிவோ பற்றோ கிடையாது. மதங்கள் இன்றைக்கு எந்த விதத்திலும் பயன்படாது. “நான் எந்த மதத்திற்கும் விரோதிதான். மதங்கள், இந்த நாட்டிலிருந்து விரட்டப்பட வேண்டும்” என்று பகிரங்கமாக எழுதியவர்தான் பெரியார் (‘விடுதலை’ பெரியார் 130 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் பக்கங்கள் 258_263)
கடவுள் மறுப்பு வாசகங்கள் – பெரியார் உலகுக்கு அளித்த அறிவிக்கை
பெரியாரின் சர்வமதக் கண்டனம் எத்தகையதோ அவரின் சர்வமதக் கடவுள் மறுப்புப் பிரகடனமும் அத்தகையதே! இந்தக்
கடவுள் அந்தக் கடவுள் என்றில்லாமல் அது எந்தக்
கடவுளாக இருந்தாலும் அனைத்தையும் உள்ளடக்கி
யதே அது. திருவாரூருக்கு அருகில் உள்ள விடயபுரத்தில் 24.5.1967 அன்று நடைபெற்ற முதல் சுயமரியாதைப் பயிற்சி வகுப்பில் தந்தை பெரியார் கலந்துகொண்டு உரையாற்றினார். இவ்வகுப்பின் போது பெரியாரால் உருவாக்-கப்பட்டு உலகுக்கு அளிக்கப்பட்டதே இந்த கடவுள் மறுப்புப் பிரகடனம்.
“கடவுள் இல்லை.
கடவுள் இல்லை.
கடவுள் இல்லவே இல்லை.
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்.
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்.
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி’’
எனும் இந்த முத்தாய்ப்பான வாசகங்களை ஒரு சூத்திரம் போல், நாத்திக உலகில் வேறு எவரும் பிரகடனப்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை.
பெர்ட்ரண்ட் ரசல் அவர்கள் “கடவுள் உண்டா? (மிs tலீமீக்ஷீமீ ணீ நிஷீபீ?) எனும் தனது சிறு நூலில் குறிப்பிடும் கருத்துகள் இங்கு கவனிக்கத்தக்கவையாக உள்ளன. பழமை வாதிகள் தாங்கள் நம்பும் கடவுளை இல்லை என்று கூறும் மற்றவர்களை நோக்கி அதனை மெய்ப்பித்துக்காட்ட வேண்டிய பொறுப்பு மறுப்பாளர்களுடையதேயன்றி நம்பிக்கையாளர்களாகிய தங்களுடையது அல்ல என்று கூறுகிறார்கள். இது தவறான வாதமாகும். பூமிக்கும் செவ்வாய்க்கோளுக்கும் இடையே ஒரு சீனத் தேநீர்க்குடுவை (கி சிலீவீஸீணீ ஜிமீணீ றிஷீt) நீள்வட்டப் பாதையில் சுற்றிவருகிறது என்றும், அந்தக் குடுவை கண்ணுக்குத் தெரியாத அளவுக்குச் சின்னஞ்சிறிது என்றும், மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தொலைநோக்கியால்கூட அதைக் காண முடியாது என்றும் ஒரு (கற்பனைச்) செய்தியை அவிழ்த்துவிட்டால் அதனைப் பொய் என்று எவராலும் மெய்ப்பிக்க முடியாது. அது போன்றுதான் நம்பிக்கையாளர்களின் வாதமும் உள்ளது.’’
தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு வாசகங்
களில் ஒரு சொல்லையோ, ஓர் எழுத்தையோ
கூட மாற்றிட முடியாத அளவுக்கு அவற்றில்
செறிவும் பொருண்மையும் அமைந்துள்ளன. கடைசி கடவுள் நம்பிக்கையாளன் இருக்கும் வரை உலகெங்கும் இவ்வாசகங்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும். நம்பிக்கையாளர்களின் காதுகளைத் திருகிக்கொண்டே இருக்கும். அறிவாசான் அய்யாவின் அடியொற்றி எழுந்த இறை மறுப்புச் சொற்றொடர்களின் இன்னொரு வடிவம் இது: “கடவுள் என்பது இன்மை. இன்மை இன்மையுள் இன்மையே! மடமை என்பது கடவுள் கற்பிதம்! கயமை என்பது கடவுளைப் பரப்புதல்! காட்டு நிலைப்பண்பு என்பது கடவுள் வணக்கம்!
ஒரே! ஒரே! ஒரே!
இந்துத்துவா என்பது பல்பொருள் உடைய ஒரு சொல்லாகும். இது பழங்காலத்தில் பயிலப்பட்ட சொல் அன்று. சாவர்க்கர் என்பவரின் அன்மைக்காலத்திய(1923) கண்டுபிடிப்பே அது. பல்வேறு பிற்போக்குக் கூறுகளை உள்ளடக்கிய ஒரு மருந்துக்குப்பி போன்றதே அது (கி நீணீஜீsuறீமீ நீஷீஸீtணீவீஸீவீஸீரீ ஸ்ணீக்ஷீவீஷீus க்ஷீமீணீநீtவீஷீஸீணீக்ஷீஹ் மீறீமீனீமீஸீts).
பிராமணியம், சனாதனம், வேதநெறி வருணதர்மம், மதவெறி, பிறமத வெறுப்பு, மனு(அ) தர்மம், உயர்ஜாதி வெறி, சமஸ்கிருத_ இந்தி மொழித்திணிப்பு, தேசிய இன எதிர்ப்பு, ஒடுக்கப்பட்டோர் உரிமை மறுப்பு, இட ஒதுக்கீடு எதிர்ப்பு, பெண்ணடிமை, மாநில உரிமை மறுப்பு போன்ற இன்னும் பலவும் அந்தக் குப்பியில் அடக்கம். ஒரே நாடு_ ஒரே மொழி-_ ஒரே கலாச்சாரம் போன்ற பல “ஒரே’’க்கள் இவர்களுடைய, நடைமுறைக்கு ஒவ்வாத பொய்ம்மை முழக்கங்கள்! பிராமணிய மதம் என்பது ஒரு கூரிய அம்பு என்றால் இந்துத்துவா என்பது விஷம் தோய்ந்த அம்பு! இந்த “ஒரே’’க்களைப் பார்த்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்த வினாக்கள் இவை. “ஒரே நாடு. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று கூறும் இந்தத்துவ ஆரியம் “ஒரே ஜாதி” என்று ஏன் ஜாதிஒழிப்பு முழக்கமிடவில்லை? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவு தீண்டாமையைத் தடை செய்தது போல ஜாதியைத் தடை செய்து சட்டம் இயற்றுவதை வரவேற்கத் தயாரா? பொது சிவில் சட்டம் வேண்டும் என்று போலி சமத்துவ வேடமிடும் இவர்கள் ஜாதி ஒழிப்பு என்றால் மட்டும் ஓடி ஒளியும் நோக்கமென்ன?’’ தமிழர் தலைவரின் வினாக்களுக்கு ஏன இந்துத்துவா வாதிகளால் விடை இறுக்க முடியவில்லை? திலகர் மாடல் விநாயக சதுர்த்தி ஊர்வலம் நடத்தும் இவர்கள் விடை இறுக்காததற்குக் காரணம், ஒரு வேளை சனாதனக் கொழுக்கட்டை தொண்டையில் அடைத்துக் கொண்டிருக்கிறது போலும்!
(தொடரும்)