அய்யப்பன் கோயில் 100 ஆண்டுகளுக்கு முன் அரையன் என்ற பழங்குடி மக்களுக்கு உரிமையானதாய் இருந்தது. அவர்களே பூசாரியாயும் இருந்தனர்.
பெண்கள் அய்யப்பன் கோயிலுக்குச் செல்லக் கூடாது என்பது மரபு என்பது மோசடியானது, பித்தலாட்டமானது, உண்மைக்கு எதிரானது.
அய்யப்பன் கோயிலுள் மது அருந்திச் செல்லும் பழக்கம் இருந்தது. பெண்கள் குடும்பத்தோடே தங்கி வசித்தனர்.
அய்யப்பன் கோயிலுக்குப் பெண்கள் செல்லும் வழக்கமும் இருந்தது. அய்யப்பன் பிரம்மச்சாரி என்பது பின்னாளில் பார்ப்பனர்கள் செய்த சதி!
அரையன் மக்களுக்கு உரிமையான கோயிலில் பார்ப்பன ஆதிக்கம் வந்த பின் சமஸ்கிருத மயமாக்கப்பட்டது.
அதன் பிறகுதான் பெண்கள் செல்லக் கூடாது; மது, மாமிசம் கூடாது என்று வற்புறுத்தப்பட்டது.
அய்யப்பன் வேட்டைக் கடவுள். அது அரையன் மக்களுக்குரியது என்று மானுட இயலாளர் தர்ஸ்டன் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார்.
எளிய மக்களின் கடவுளை பார்ப்பனர்களும், அரச குடும்பத்தினரும் பின்னாளில் கைப்பற்றிக் கொண்டு, அய்யப்பனை ஆணாதிக்கம் உட்பட்ட ஆதிக்க சக்திகளின் கடவுளாக்கி, தங்கள் விருப்பப்-படி விரதம், சடங்குகளை உருவாக்கிவிட்டனர்.ஸீ