அரசியலில் நண்பராக இருக்கும்போதும் சரி, எதிரியாக இருக்கும்போதும் சரி, தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி.
– இந்திராகாந்தி
இந்திய அரசியலில் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. ஏழைகள், சமூகத்தின் அடிநிலையில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்பதற்காக அவருடைய வீட்டுக் கதவும், அவருடைய காதுகளும் எப்போதும் திறந்தே இருக்கும். சமூக நீதிக்கான பயணத்தில் எனக்கு உறுதியான கூட்டாளியாக அவர் திகழ்ந்தார். தன்னுடைய ஆட்சியையும் இழக்கத் தயாராக இருந்தார். அதற்காக என் வாழ்நாள் முழுக்க அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
– விஸ்வநாத் பிரதாப் சிங்

கருணாநிதி ஒரு பன்முக ஆளுமை. நவீனத் தமிழ்நாட்டை உருவாக்க அவர் எடுத்துவரும் இடையறாத முயற்சிகள் என்றும் நினைவில் நிற்கும்.
– அடல் பிஹாரி வாஜ்பேயி
கருணாநிதி தமிழ்நாட்டின் தலைவர் மட்டுமல்ல; நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர். அவரது வாழ்வும் செயல்பாடுகளும் நாடு முழுவதிலும் இருக்கும் எண்ணற்றோரை உத்வேகம் கொள்ள வைக்கிறது.
– மன்மோகன் சிங்