உணவே மருந்து : கரும்புச் சாறு தரும் இயற்கைச் சத்து!

மார்ச் 1-15 2022

கோடைக்காலத்தில் மிகவும் தாகமாக இருந்தால், தீங்கு விளைவிக்கும் வேதிப்-பொருள்கள் கலந்த பானங்களை தவிர்த்து கரும்புச் சாறு குடித்துப் பாருங்கள். அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மனநிலையைப் புதுப்பிக்கும் தன்மை உடையது.

கரும்புச் சாறு அடிக்கடி பருகுவதால்  உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கழிவுகளை நீக்கி உடலைத் தூய்மைப் படுத்துவதில் உதவுகிறது.

உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.

கரும்புச் சாறு நமது உடலுக்கு உடனடி ஆற்றலை தருவதில் சிறந்த ஒன்றாகும்.

விட்டமின் ‘சி’ அதிகமாக கரும்புசாற்றில் காணப்படுகிறது. இது தொண்டைப்புண் வயிற்றுப்புண் குணமாக உதவுகிறது.  வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நோய்த் தொற்றுகளைத் தடுக்கக்கூடிய எதிர்ப்பாற்றலுக்கு ஒரு வளமான மூலமாகவும் கரும்புச் சாறு இருக்கிறது.

அதே போன்று உங்கள் தொண்டையில் அரிப்பு அல்லது எரிச்சல் இருப்பது போல் உணர்ந்தால் கரும்புச் சாற்றைத் தொடர்ந்து குடித்து வரும்போது அவை மறைந்துவிடும்.

சிலருக்கு பற்கள் வலிமை இழந்து பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து இருக்கும். இவர்கள் கரும்புச் சாறு தொடர்ந்து சாப்பிடு-வதால் பற்களுக்கு வலிமை அளிக்கிறது.

உடலில் உள்ள நீர்ச்சத்து குறையாமல் தடுக்கிறது. மேலும் இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்குப் பலம் அளிக்கிறது.

நமது உடலின் அனைத்து இயக்கங்களையும் மூளைதான் கட்டுப்படுத்திச் செயல்படச் செய்கிறது. அந்த வகையில் கரும்புச் சாறு அருந்துவதன் மூலம் மூளையின் செயல்-பாட்டை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இது உதவுகிறது.

கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அளவுகளை சமன் செய்ய உதவுகிறது. மற்றும் செரிமானத்திற்கான நொதிகள் சுரக்கவும் இது உதவுகிறது. பொதுவாக பெரும்பான்மையான செரிமான சுரப்பிகள் சுரக்க கல்லீரலே முதல் காரணமாக இருக்கும். கல்லீரல் நன்கு செயல்புரியவும் செரிமானம் நன்கு நடைபெறவும் கரும்பு பெரும் துணை புரிகிறது.

சித்த மருத்துவத்தின்படி உடலில் அதிகரிக்கும் பித்தத்தை கரும்பு சமநிலைப் படுத்தும். சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உள்ளிட்ட சிக்கல் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.

கரும்பில் உள்ள பாலிஃபீனால் என்னும் இயற்கையான வேதிப்பொருள், ரத்தத் தட்டு அணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக்கூடிய இரத்த உறைவைத் தடுப்பதுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.

முக்கியமாக மென் கரும்பு இனிப்பாக இருந்தாலும் இதில் இருக்கும் சுக்ரோஸ் எனும் கூட்டுச் சர்க்கரை உடலில் வளர்சிதை மாற்றம் நடக்கும் பொழுது செயல்புரியும் நொதிகள் காரணமாக இரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்காது.

கரும்புச் சாற்றை கோடையில் மட்டுமன்றி  எக்காலத்திலும் பருகலாம். இயற்கையான சத்து நிறைந்த கரும்புச் சாற்றைக் குழந்தைகளுக்கும் கொடுத்துப் பழக்கினால் செயற்கை பானத்தை விரும்ப மாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *