சமூகநீதி கண்காணிப்புப் குழுத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் நமக்கு அளித்த செவ்வியில்…

நவம்பர் 1-15,2021

இந்தியாவிலேயே முதன்முறையாகச் சமூகநீதி சரியாக நடைமுறைப்படுத்தப்-படுகின்றதா என்பதைக் கண்காணிக்க ஒரு குழுவைத் தமிழ்நாடு அரசு சில நாள்களுக்கு முன் நியமித்-துள்ளது. தான் ஒரு சமூகநீதியின் சரித்திர நாயகன் என்பதைத் தமிழ்நாடு முதல்வர் மீண்டும் ஒருமுறை மெய்ப்பித்திருக்கிறார்.

சமூகநீதியைக் கண்காணிக்க வேண்டிய தேவை இப்போது ஏன் எழுந்துள்ளது? விடை மிக எளிமையானது. கடந்த பத்து ஆண்டுகளில், சமூகநீதி சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இடஒதுக்கீடு பல இடங்களில் ஒழுங்காகப் பின்பற்றப்படவில்லை. இவற்றையெல்லாம் கண்காணிக்க வேண்டிய தேவை இன்று மிக இன்றியமையாதது ஆகிவிட்டது.

திராவிட இயக்கத்தின் தோற்றமே சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டதுதான். இன்றும் திராவிடம் என்றால் சமூகநீதி என்றுதான் பொருள் கொள்ளப்படுகிறது. ஆகவே, தந்தை பெரியாரின் பிறந்த நாளைச் சமூகநீதி நாள் என்று அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர், அதனைக் கண்காணிக்க வேண்டிய தேவையைச் சரியாக உணர்ந்துள்ளார்.

அந்தக் கண்காணிப்புக் குழுவில், என்னையும் தகுதிவாய்ந்த உறுப்பினர்கள் எழுவரையும் நியமித்துள்ள முதல்வருக்கு என்றும் நன்றியுடையோம்! கொடுத்த பணியைச் செவ்வனே செய்வோம், உண்மையாய் இருப்போம், உண்மையாய் உழைப்போம் என்று உறுதி கூறுகின்றோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *