செய்தியும் – சிந்தனையும்

டிசம்பர் 16-31

ஆணாதிக்க அப்பாக்கள்

ன் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடும் இயல்புடையவர் வங்க எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின். மதங்களை விமர்சித்தும் பெண்ணுரிமைக்கு ஆதரவாகவும் பேசிவருபவர். அண்மையில் இந்தி நடிகையும், இந்திய அழகிப் பட்டம் பெற்றவருமான பிரியங்கா சோப்ராவின் தந்தையின் கருத்து ஒன்றைக் கடுமையாக விமர்சித்துள்ளார். எங்கள் மகள் பிரியங்காவை ஆண் பிள்ளையைப் போலத்தான் வளர்த்திருக்கிறோம்; அவள் எங்களுக்கு மகனைப்போல… என்று அவர் சொன்னதுதான் நஸ்ரினின் விமர்சனத் துக்குக் காரணம். என்ன அறிவுகெட்டதனமான பேச்சு? இது இன்னும் பெண் குழந்தைகள் மீது உள்ள வெறுப்பைக் காட்டுகிறது. ஆணாதிக்க மனப்பான்மைதான் இது. அப்பாக்கள் தங்கள் ஆண் பிள்ளைகளைக் காண் பித்து இவன பொண்ணைப் போல வளர்த்திருக்கோம்னு சொல்ற நாளினை எதிர்பார்த்து ஏங்கிக் காத்துக்கிட்டிருக் கேன்… என்று தனது டிவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

 

மீண்டும் நாளந்தா பல்கலைக்கழகம் !

அய்ந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு 1197 வரை இயங்கி வந்த நாளந்தா பல்கலைக்கழகம், பக்டியார் கில்ஜி என்ற துருக்கியர்களின் ஆக்கிரமிப்பாளனால் எரித்து அழிக்கப்பட்டது. பௌத்தக் கல்வி நிலையமாக சிறப்பாக நடந்து வந்த நாளந்தா உலகின் ஒரு சில பழமையான பல்கலைக்கழகங் களுள் ஒன்றாக வரலாற்றில் குறிக்கப்பட் டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று 1996இல் அன்றைய ஜனதா தளத் தலைவர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் குரல் கொடுத்தார். இதனையடுத்து 2007இல் பிகார் அரசு நாளந்தா பல்கலைக்கழகச் சட்டத்தை இயற்றி, மீண்டும் தொடங்குவதற் கான முயற்சிகள் மேற்கொண்டது. சீன அரசின் 10 இலட்சம் அமெரிக்க டாலர் நிதி உதவி, பிஹார் அரசின் 446 ஏக்கர் நிலம் ஆகியவற்றைக் கொண்டு இப்போது நாளந்தா பல்கலைக்கழகம் 2013 ஆம் ஆண்டில் தொடங்கப்படவுள்ளது. இப்பல்கலைக் கழகத்தின் ஆலோசனைக் குழுத் தலைவர் அமர்த்தியா சென் பரிந்துரையில்  கோபா சபர்வால் துணைவேந்தராக நியமிக்கப் பட்டுள்ளார்.    ரயில்

ஓட்டும் முதல் பெண்

பெங்களூருவில் கடந்த அக்டோபர் 20 முதல் மெட்ரோ ரயில் ஓடத்துவங்கிவிட்டது. அதில் முதன்முதலாக ஒரு பெண் ரயில் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பெயர் ராஷ்மி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *