சட்டசபைக்குப் பார்ப்பனர் செல்வதன் ஆபத்து!

ஏப்ரல் 1-15,2021

திருவாளர் ராவ்பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் எம்.எல்.ஏ. இந்திய சட்டசபைக்கு நமது பிரதிநிதியாக அனுப்பப்பட்டவர். அவர், சமூகச் சட்டம் செய்ய சட்டசபைக்கு அதிகாரம் இருக்கக் கூடாதென்றும், மத விஷயங்களில் எந்தச் சீர்திருத்தவாதியும் பிரவேசிக்கக் கூடாதென்றும், கல்யாண வயதைப் பற்றி சாஸ்திரங்களில் என்ன கூறியிருக்கிறதோ அதற்குச் சிறிதுகூட மாற்றம் செய்யச் சீர்திருத்தவாதிகளையாவது, சர்க்காரையாவது, சட்டசபைகளையாவது அனுமதிக்கக் கூடாது என்றும் பேசி அதற்காகக் கட்டுப்பாடான பிரசாரம் செய்ய வேண்டுமென்றும் தன்னால் கூடியவரை தான் சட்டசபையில் பார்த்துக் கொள்வதாகவும் கூறியிருக்கின்றார். சுயராஜ்யம் கிடைத்த பிறகு சமூகச் சட்டம் செய்து கொள்ளலாம் என்று மக்களை ஏமாற்றி அரசியல் குழியில் விழுகும்படி செய்யும் பார்ப்பன தேசியவாதிகளும்  அவர்களது பத்திரிகைகளும் இதற்கு யாதொரு பதிலும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டே யிருக்கின்றன. நாம் இந்தப் பித்தலாட்டங்களை எடுத்துக் காட்டினால் அது தேசத் துரோகம் என்பதாகவும் சுயராஜ்யத்திற்கு முட்டுக்கட்டையாகவும் போய்விட்டதாகக் கூக்குரல் போட்டு விஷமப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆகவே, எப்படியாவது சட்டசபை முதலிய ஸ்தானங்களுக்கு அரசியல் கட்சிகளையும் அபிப்பிராயங்களையும் எதிர்பார்க்காமல் உண்மையான சீர்திருத்தத்திற்குப் போதிய உணர்ச்சியுள்ள மக்களாகப் போகும்படி பார்த்துக் கொள்ள வேண்டியதாகும். அதை விட்டுவிட்டு அரசியல் கொள்கைகள் என்பதைக் கவனித்துக் கொண்டு எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பார்ப்பனர்களை நமது பிரதிநிதிகளாக அனுமதித்தோமானால் விதவைகள் கற்பம் உதிரக் கட்டியாகி திடீரென்று மறைந்து விடுவதுபோல் நமக்குத் தெரியாமலேயே அவர்கள் பார்ப்பனியப் பிரதிநிதியாகவேதான் ஆகிவிடுவார்கள். அதில் சிறிதும் சந்தேகம் கொள்ளுவது அறியாமையேயாகும்.

  – ‘குடிஅரசு’ – கட்டுரை – 26.10.1930

அர்ச்சகர்களின் தகுதி

 “அர்ச்சகர்களும், பூசாரிகளும் எழுத்து வாசனை அற்றவர்கள் அல்லது அரைகுறை படிப்பே உள்ளவர்கள். அன்றியும், இவர்கள் பொதுவாகப் பணம் பறிக்கும் நோக்கமே கொண்டிருக்கிறார்கள். மந்திரங்களை இவர்கள் உச்சரிக்கின்ற முறையும், சுரந்தவறிச் சொல்லும் முறையும், கேட்போர் மனதில் பிழைபடவும், விருப்பம் உண்டாக்காமலும் இருந்தன. இதில் மிகவும் நொந்து கொள்ள வேண்டிய தன்மை என்னவென்றால், இவர்களுக்குத் தாங்கள் சொல்லுவதன் பொருளோ, கருத்தோ கொஞ்சமும் தெரியாது. இதனால், தெய்வ அருள் வேண்டிக் கோயிலுக்கு வரும் சேவார்த்திகள் மற்றும் பக்தக் கோடிகளிடத்தில் பக்தியுணர்வையும், தெய்வ உணர்வையும் ஊட்ட முடிவதில்லை என்பது தெளிவு.’’

(பக்கம் 47 – சர்.சி.பி.இராமசாமி அய்யர் தலைமையிலே (1960-62) அமைந்த குழு மத்திய அரசுக்கு அளித்த அறிக்கை)

கோடைக்கு இதம் தரும் பதநீர்

¨           பதநீர் நம் தட்பவெப்ப நிலைக்கேற்ற மிகச்சிறந்த பானம். உடல் சூட்டை உடனே தணித்து குளிர்ச்சியை அளிக்கக் கூடியது.

¨           பதநீரில் லாக்டோஸ் எனும் சர்க்கரை சத்து மிகவும் அதிகமாக உள்ளது. இது தவிர கொழுப்பு, கால்சியம், புரோட்டீன் சத்துகளும் உள்ளன.

 

உலகிலேயேஅதிக ஆமைகள்

ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள்(Olive ridley sea turtle) மிக அதிக எண்ணிக்கையில் பசிஃபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. கரைக்கு வந்து முட்டையிட்டுச் செல்பவை. முட்டையிட்ட 45 முதல் 65 நாள்களுக்குள் வெளிவரும் குஞ்சுகள் பெரும்பாலும் தாயின் பாதுகாப்பின்றியே வளர்கின்றன.

உலகிலேயே ஒரிசா மாநிலக் கடல் பகுதிகளில்தான் மிக அதிக எண்ணிக்கையில் இவை உள்ளன என்கிறார்கள் ஆராய்ச்சி யாளர்கள். சென்னைக் கடற்கரையிலும் இவற்றைக் காணலாம்.

 

வண்ணத்தில் ‘எக்ஸ்ரே’

நோய்களை அறிவதற்கு மிகவும் உதவும் எக்ஸ்ரே, பல வண்ணம் காட்டும் படமாகப் போகிறது. அது மட்டுமல்ல, முப்பரிமாணத்திலும் உடலுக்குள் உள்ள பகுதிகளைக் காட்டும் என்பதோடு, அந்த முப்பரிமாண எக்ஸ்ரேவை, மருத்துவர்கள் தேவைக்கேற்றபடி குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் பார்க்க முடியும்.

நியூசிலாந்தைச் சேர்ந்த, ‘மார்ஸ் பயோ இமேஜிங்’ உருவாக்கியுள்ள இந்தத் தொழில்நுட்பம், ‘மெடிபிக்ஸ்  – 3’ (Medipix 3)என்ற சிறப்பு சிலிக்கன் சில்லை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. நோயாளியின் உடலில் பாய்ச்சப்படும் எக்ஸ்ரே, எலும்பு, தசை மற்றும் மென்திசுக்களைக் கடந்து செல்கையில், மாறுதல் அடைகிறது. இந்த மாறுதலை, மெடிபிக்ஸ்_3 சில்லும் அதன் மென்பொருளும் மிகத் துல்லியமாக அலசி, ஒரு படத்தை உருவாக்குகின்றன.

 

நிர்பயா நிதி சரியாகப் பயன்படுகிறதா?

2012இல் டெல்லியில், இந்தியாவையே உலுக்கிய நிர்பயா என்பவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை அடுத்து, பெண்களின் பாதுகாப்பு, வளர்ச்சிக்காக நிர்பயா நிதி என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தாக்கலில் பல ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. ஆனால், இந்த நிதி சரியாகப் பயன்படுத்தப்படாமலே இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், ஒதுக்கப்படும் நிதி, பெண்களின் பாதுகாப்பு, வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு நேரடியாகப் பயன்படுத்தப் படவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

தெரிந்து கொள்வோம்

உலகத்திலேயே சிறிய கரன்சி நோட்டு ஹாங்காங் அரசு வெளியிட்ட 1 சென்ட் (இந்திய மதிப்பில் ரூ.63.68) மதிப்புள்ள நோட்டுதான். ஆண்டு 1988. அது ஒரே பக்கத்தில் அச்சாகிய நோட்டு. அடுத்தப் பக்கம் வெற்றிடமாகவே இருந்தது.

தெரிந்து கொள்வோம்

தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் காலணிகள், கையுறைகள், ஹெல்மெட் ஆகியவை ஆஸ்பெஸ்டாஸ் இழைகளால் ஆனவை. ஆஸ்பெஸ்டாஸ் நெருப்பில் எரியாது. மின்சாரத்தைக் கடத்தாது. 2000 முதல் 3000 சென்டிகிரேடு வரை வெப்பத்தைத் தாங்கக் கூடியது.

 

திராவிட இயக்கம் என்றும் தேவை!

கேள்வி: அரசியல் இல்லாமல் இலக்கியம் இருக்க முடியுமா?

பதில்: முடியாது. எழுதுவது என்பதே அரசியல் செயல்பாடுதான். நாம் யார் சார்பாக நின்று எழுதுகிறோம் என்பதுதான் எழுதப்படுகிற இலக்கியத்திற்கு வலிமை சேர்க்கிறது. இல்லாத ஒன்றை எழுதுவதும், ஆவிகள் உலகத்தை எழுதுவதும் உண்மைக்குப் புறம்பானவை. உண்மையை எழுதுகிறவனே நிஜமான எழுத்தாளன்.

கேள்வி: நூற்றாண்டைக் கடந்துவிட்ட திராவிட இயக்கங்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

பதில்: திராவிட இயக்கங்களின் செயல்பாட்டாளர்களென்று எல்லோரையும் _ என் பார்வையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோரை _ சொல்ல முடியாது. இன்று சிறு சிறு குழந்தைகள் கூட திராவிட இயக்கங்களின் தேவைகளை உணர்ந்திருக் கிறார்கள். திராவிட இயக்கங்களின் உழைப்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் எதிர்வரும் காலங்களிலும் திராவிட இயக்கங்களின் பாதை என்பது ஒளிரும்; மிளிரும்.

கேள்வி: இன்றைக்கும் திராவிட இயக்கங்களின் தேவை இருக்கிறதா?

பதில்: நிச்சயமாக. தமிழகத்தில், இந்தியாவில் ஜாதி சார்ந்த இழிவுகள் இருக்கும்வரை, மதம் சார்ந்த கற்பிதங்கள் இருக்கும்வரை, அறிவியல் தன்மைக்கு எதிராக கதைகளின் வழியாக, புராணங்களின் வழியாக, இதிகாசங்களின் வழியாக, கட்டுக்கதைகளின் வழியாக மூடநம்பிக்கைகள் பரப்பப்படும் வரை, பெண்ணடிமைத்தனம் இருக்கும்வரை, சமூகநீதி தேவைப்படும் வரை, திராவிட இயக்கங்களின் தேவை இருந்துகொண்டே இருக்கும்’’ என்றார் இமையம்.

 

பண நோட்டுகளில் வரிசை எண்கள் அச்சாகியிருக்கும். வரிசை எண்களே இல்லாத கரன்சி நோட்டுகளையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.1940-45 உலகப் பெரும்போரின்போது ஜப்பான் கைப்பற்றிக்கொண்ட நாடுகளில் ஏற்பட்ட ராணுவ ஆட்சி, வரிசை எண் இல்லாத கரன்சி நோட்டுகளை வெளியிட்டது.a

(‘உண்மை’, ஜனவரி 16-31, 2019)

 

மதமாற்றம் – யார் காரணம்?

1.2.1982 அன்று திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் சார்பில் இந்து விழிப்புணர்வு நாள் கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்ட அதன் தலைவர் ராமகோபாலன் என்ன கூறினார் தெரியுமா?

“நம்முடைய கடந்தகால செயல்களின்மூலம் இப்போது நடைபெறும் மதமாற்றங்களுக்கு வழிவகுத்து விட்டோம். மதத்திற்குள்ளேயே ஜாதிப் பாகுபாடுகளை ஏற்படுத்தி, நம்மை விட்டுச் செல்லும் அளவுக்குத் தூண்டி விட்டோம்.’’

               (“தினமலர்’’ 2.2.1982, பக்கம் 6)

ஆசை காட்டி அச்சுறுத்தி மதமாற்றம் நடைபெறுகிறது என்று கூறி மதமாற்றுவது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் பற்றி பா.ஜ.க. தேர்தல் அறிக்கை கூறுகிறதே. மதம் மாற்றத்திற்குக் காரணம் இந்து மத ஜாதிதான் என்று திருவாளர் ராமகோபாலன் கூறுகிறாரே? இதற்கு என்ன பதில்?

 

உலகின்பழைமையான உயிர்

57 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டிக்கின்சோனியா (Dickinsonia) என்ற கடல்வாழ் உயிரினத்தின் பாறைப்படிமம், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத் தலைநகரான போபாலில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பிம்பேட்கா (Bhimbetka) என்னும் இடத்தில் இது கிடைத்துள்ளது. உலகிலேயே மிகப் பழைமையான உயிரினம் இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *