28.1.2021 – ஜெயலலிதா நினைவிடத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிச்சாமி.
28.1.2021 – டெல்லியில் கலவரம் ஏற்படக் காரணம், நடிகர் தீப்சிந்து – விவசாய சங்க பிரதிநிதிகள் குற்றச்சாட்டு.
29.1.2021 – சிதம்பரம் ராஜா முத்தையா சுயநிதிக் கல்லூரியாக மாற்றி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.
29.1.2021 – ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்படும் – எடப்பாடி பழனிச்சாமி
30.1.2021 – உத்தரகாண்ட் மாநில அல்மோரா மாவட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் அபராதம்.
30.1.2021 – புதிய வேளாண் சட்டங்கள் ஒன்றரை ஆண்டு நிறுத்தி வைப்பு – குடியரசுத் தலைவர் பட்ஜெட் கூட்டத்தொடர் உரையில் அறவிப்பு.
31.1.2021 – தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக ராஜீவ் ரஞ்சன் பொறுப்பேற்றார்.
31.1.2021 – பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய மும்பை நீதிபதி புஷ்கா கனேடிவாலாவின் பதவி உயர்வு பரிந்துரையை திரும்பப் பெற்றது கொலீஜியம்.
1.2.2021 – மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்.
1.2.2021 – 69 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
2.2.2021 – பட்ஜெட்டில் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு உச்சவரம்பு 49 சதவிகிதத்தில் இருந்து 74 சதவிகிதமாக உயர்வு
3.2.2021 – தமிழ் ஈழம் அமைந்திட பொது வாக்குப் பதிவு நடத்த வேண்டும். அய்.நா. மனித உரிமை ஆணையத்திற்கு வைகோ கடிதம்.
3.2.2021 – நாசா செயல் தலைவராக இந்திய விஞ்ஞானி பாவ்யாலால் நியமனம்.
4.2.2021 – எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்.
4.2.2021 – மோடி அரசு 3 ஆண்டுகளில் வாங்கிய கடன் மட்டும் ரூ.19 லட்சம் கோடி? – நிதித்துறை அறிவிப்பு.
5.2.2021 – விவசாயப் போராட்டம் பற்றிய அமெரிக்க பிரபலத்தின் கருத்துக்கு தானே முன்வந்து பதிலளித்த வெளியுறவு அமைச்சகம்!
5.2.2021 – கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையப் பெயரை பாஷ்யம் கோயம்பேடாக மாற்றியதற்கு வைகோ கடும் கண்டனம்.
5.2.2021 – 7 பேர் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் – ஆளுநர் விளக்கம்.
6.2.2021 – கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி – முதல்வர் அறிவிப்பு.
6.2.2021 – பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை உயர்த்தும் சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றம்.
7.2.2021 – ஊரடங்கு காலத்தில் எக்கச்சக்கமாக உயர்ந்த கருக்கலைப்பு – இந்திய அளவில் தமிழகம் 2ஆம் இடம்.
7.2.2021 – சி.ஆர்.பி.எப் ‘கோப்ரா’ படைப்பிரிவில் பெண் கமாண்டோக்கள்.
8.2.2021 – கேரளாவில் 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த தாய் கைது.
8.2.2021 – அயோத்தியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்றுங்கள் – அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு.
8.2.2021 – உத்தரகாண்டில் பனிப்பாறை உடைந்து வெள்ளப்பெருக்கு – 150 பேர் மரணம்.
9.2.2021 – மாரியம்மன் கோவிலில் பூசையில் வைக்கப்பட்ட ஒரு தேங்காய் ரூ.78 ஆயிரத்துக்கு ஏலம்.
9.2.2021 – தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை சுப்ரீம் கோர்ட் பிப்ரவரி 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.
9.2.2021 – ஆண்டுக்கு இருமுறை ‘நீட்’ தேர்வு: மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புதல் – நிகழாண்டு முதல் நடைமுறை.
10.2.2021 – கிருபானந்த வாரியார் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் – முதல்வர் அறிவிப்பு
10.2.2021 – வஞ்சிக்கப்படும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரடி நிதி ஒதுக்கீடு கிடையாது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல்.
(தொகுப்பு : மகிழ்)