பன்னாட்டுப் புகழ்பெற்ற ஜேம்ஸ்ராண்டி நினை வேந்தல் நிகழ்ச்சியில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் அறிவியல் பற்றாளர்கள், பகுத்தறிவாளர்கள் கலந்து கொள்ள, ஜேம்ஸ் ராண்டி படத்தினை திறந்து வைத்து தமிழர் தலைவர் 25 நிமிடங்கள், முழுவதும் ஆங்கிலத்தில் – பங்கேற்றோர் அனைவரும் புரிந்திடும் வகையில் உரையாற்றினார்.
நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் தலைமை வகித்தார். ஜேம்ஸ் ராண்டி பற்றிய வாழ்நாள்
குறிப்பினை எடுத்துக் கூறி அய்யுறவு செயல்பாட்டாளர் டாக்டர் கணேஷ் வேலுசாமி அறிமுக உரை ஆற்றினார். ஜேம்ஸ் ராண்டி ஆற்றி வந்த மானுட மேம்பாட்டுப் பணிகளை எடுத்துக் கூறி நினைவேந்தல் உரைகளை, அமெரிக்கா – பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன், மகாராட்டிர அந்தசிரத்த நிர்மூலன் சமிதி அமைப்பின் செயல் தலைவர் அவினாஷ் பாட்டீல், இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் (Federation of Indian Rationalist Associations – FIRA) தேசியத் தலைவர் பேராசிரியர் நரேந்திர நாயக் ஆகியோர் வழங்கி ஜேம்ஸ் ராண்டியின் சமுதாயப் பங்களிப்பினை பாராட்டிப் பேசினர். நிகழ்ச்சிக்கு வருகை தந்தோரை வரவேற்று பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் மா. அழகிரிசாமி பேசினார். நிறைவாக பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் இரா. தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.