* உலகிலேயே அதிகமாக இனிப்பு உண்கிறவர்கள் இங்கிலாந்துக்காரர்கள்.
* உடலில் இருக்க வேண்டிய நீரின் அளவு இரண்டு சதவிகிதம் குறைந்தால் நமக்குத் தாகம் ஏற்படும்.
******
விண்வெளி மோதல்கள்
அமெரிக்காவிலுள்ள தனியார் விண்வெளி நிறுவனமான ‘ஸ்பேஸ்எக்ஸ்’க்கு சொந்தமான ‘ஸ்டார்லிங்க்’ எனும் செயற்கைக் கோளும் அய்ரோப்பிய ஒன்றியம் அனுப்பியிருந்த ஆய்வு செயற்கைக்கோள் ஒன்றும் மோதவிருந்தனவாம். இதனால் அய்ரோப்பிய ஒன்றியம் தனது செயற்கைக்கோளின் பாதையை மாற்ற வேண்டியிருந்ததாம். பூமிக்கு மேல் 320 கி.மீ. தொலைவில் நடந்துள்ள இந்த நிகழ்வு விண்வெளிப் பயணங்களின் பாதுகாப்பு குறித்தும் விண்வெளியில் சுற்றும் செயற்கைக்கோள்களுக்கு இடையில் ஏற்படக்கூடிய மோதல்கள் குறித்தும் கவலையை எழுப்பியுள்ளது.
******
* உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடு இந்தியாதான்.
* உலகிலேயே மினரல் வாட்டர் அதிகம் பயன்படுத்துபவர்கள் ரஷ்யர்கள்தான்.
* தாய்லாந்து நாட்டில் மீன் சண்டை ஒரு பிரபலமான விளையாட்டு.
* உலகிலேயே அதிகமாக சேமிப்பவர்கள் சிங்கப்பூர்காரர்கள்தாம்!
* இந்தியாவிற்குள் நுழைந்த முதல் அய்ரோப்பிய வீரன் அலெக்சாண்டர்.
******
* சிலி நாட்டின் ஒரு பகுதியை தென் அமெரிக்காவின் பூங்கா என்கிறார்கள்.
* லெசித்தின் என்னும் அமிலம் தொடர்ந்து நம் உடலில் சுரந்தால் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். ஏனெனில் ‘லெசித்தின்’ கொலஸ்ட்ராலைக் கணிசமாகக் குறைக்குமாம்.
* சில செல்களில் 30 மடங்கு கிருமிகள்கூட இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.
* விலங்குகளில் மிகச் சிறிய இதயம் கொண்டது சிங்கம்.