Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

1959இல் ‘ஆரிய மாயை’ நூல் எழுதியதற்காக

பேரறிஞர் அண்ணாவுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது

என்பது உங்களுக்குத் தெரியுமா?

தமிழறிஞர் சாமி சிதம்பரனார்

பிறப்பு: 01.12.1900

தமிழறிஞர் சாமி சிதம்பரனார் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்க தளபதிகளில் ஒருவர். ‘குடிஅரசு’ ஏட்டில் அறிவார்ந்த கருத்துகளை அள்ளித் தந்து அறிவியக்கத் தொண்டாற்றினார். தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் ‘தமிழர் தலைவர்’ எழுதியவர். ‘விடுதலை’ பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியவர்.

சுயமரியாதைச் சுடரொளி ஆ.திராவிடமணி

 

பிறப்பு: 02.12.1914

ஆ.திராவிடமணி அவர்கள் தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் ஆசிரியராவார். தமிழர் தலைவரை இளமைக் காலத்தில் சுயமரியாதை சொற்பொழிவாளராகத் தயாரித்தவர். திராவிடர் கழகத்தின் கூட்டுச் செயலாளராக பணியாற்றியவர்.