நடிகவேள் எம்.ஆர்.இராதா

செப்டம்பர் 16-30

“நமது 40வருட பிரச்சாரத்தை ஒரே நாடகத்தில் செய்கிறார்” என்று தந்தை பெரியார் பாராட்டினார். தாமாகவே சொந்தத்தில் நாடகக் குழுவொன்றை நிறுவி அதற்குத் திராவிட மறுமலர்ச்சி நாடகசபா என்று பெயர் வைத்து ‘தூக்குமேடை’, ‘போர்வாள்’, ‘இரத்தக் கண்ணீர்’ எனும் புரட்சி நாடகங்களைப் பல ஊர்களில் நடத்தி, நாடு முழுவதும் மாபெரும் பரபரப்பை உருவாக்கிவிட்டார்!

இவருக்கென்றே நாடகத் தடைச் சட்டம் என்று ஒன்றை அரசு நிறைவேற்றியது.

இராதாவைப் பெருமை தேடிவந்து சேர்ந்தது. ஆனால், அந்தப் பெருமை காரணமாக அவர் தம்மை ஒரு கவர்ச்சிப் பொருளாக வைத்துக்கொள்ள விரும்பியதே இல்லை.

சென்னை பெரியார் திடலில், “நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம்’’ என்ற பெயரிலேயே ஒரு அரங்கம் அமைத்தார் தந்தை பெரியார்!  இயக்க வீரராகவே இறுதிவரை வாழ்ந்த இராதா அவர்கள் 17.9.1979 அன்று இயற்கையுற்றார்.  வாழ்க நடிகவேள் இராதா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *