பெரியாரை அறிவோமா?

செப்டம்பர் 16-30

1.    பகுத்தறிவுப் பகலவன் எந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பிறந்தார்?

அ) 1869 ஆ) 1879 இ)1901 ஈ) 1885

2.    தங்கநிறத் தந்தைக்கு 76 வயதில் 76 பவுன் தங்கம் வழங்கிய ஊர் எது?

அ) காஞ்சிபுரம் ஆ) சேலம் இ) நாகப்பட்டினம் ஈ) தஞ்சை

3. 1971இல் சேலத்தில் பெரியாருக்குச் செய்யப்பட்ட சிறப்பு யாது?

அ) வெள்ளிச் சிம்மாசனம் வழங்கல் ஆ) வேன் ஊர்தி வழங்கல் இ) எடைக்கு எடை வெள்ளி வழங்கல் ஈ) எடைக்கு எடை பொன் வழங்கல்

4. கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் வாழ்ந்த ஆண்டுகள்?

அ) 49 வருடங்கள் 5 மாதங்கள் 8 நாட்கள் ஆ) 101 வருடங்கள் 9 மாதங்கள் 3 நாட்கள் இ) 94 வருடங்கள் 3 மாதங்கள் 7 நாட்கள் ஈ) 99 வருடங்கள் 9 மாதங்கள் 9 நாட்கள்

5.    மனிதநேயக் கொள்கையைப் பரப்ப பெரியார் அவர்கள் தம் வாழ்நாளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாட்களின் எண்ணிக்கை

அ) 8,200 ஆ) 8,100 இ) 3,600 ஈ) 4,200

6.    நன்றிபற்றி பெரியார் அவர்களின் கருத்து என்ன?

அ) நன்றி உணர்வென்பது உதவிசெய்யப் பெற்றுக் கொண்டவர் காட்ட வேண்டிய கடமையே தவிர, உதவி செய்தவன் அதை எதிர்பார்ப்பது சிறுமைக் குணமாகும். ஆ)ஒருவர் மற்றொருவருக்கு உதவி செய்ய வேண்டுமென்பது அவரவரது ஊழ்வினைப் பயனே. எனவே, நன்றி என்பது தேவையற்றது. இ) ஒரு செயலைச் செய்தவன் அந்தப் பலனை எதிர்பார்ப்பது இயற்கை. எனவே, உதவி  செய்தவன் நன்றியை எதிர்பார்ப்பது தவறு அல்ல. ஈ) நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

7.    தந்தை பெரியார் தாடியுடன் காட்சியளித்தது எப்போது?
அ) வைக்கம் போராட்ட முடிவில் ஆ) அய்ரோப்பிய சுற்றுப் பயண முடிவில் இ) மலேயா சுற்றுப்பயண முடிவில் (11.01.1930) ஈ) இந்தி எதிர்ப்புச் சிறைவாசம் முடிவில்.

8.    மதங்கள் மூடநம்பிக்கையை வளர்ப்பதால் அவை அழிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி இந்து, இசுலாமிய மதக்காரர்களின் எதிர்ப்பை எதிர்நோக்க வேண்டிய வாய்ப்பை உண்டாக்கிய மாநாடு எது?

அ) கோவை பார்ப்பனரல்லாதார் மாநாடு ஆ) மதுரை பார்ப்பனரல்லாதார் மாநாடு இ) ஈரோடு சுயமரியாதை மாநாடு ஈ) விருதுநகர் சுயமரியாதை மாநாடு.

9.    முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவர் யார்?
அ) சிவகங்கை இராமச்சந்திரன் ஆ) சர்.பி.டி.இராசன் இ) பெரியார் ஈ) ஊ.பு.அ.சவுந்திரபாண்டியன்

10.    பெரியார் உலகச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாள் எது?
அ) 2.12.1928 ஆ) 13.12.1931 இ) 1.11.1930 ஈ) 17.9.1929

 


 

பெரியாரை அறிவோமா விடைகள்

1. ஆ

2. இ

3. அ

4. இ

5. அ

6. அ

7. இ

8. ஈ

9. ஈ

10. ஆ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *