தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு
உதவிப் பொறியாளர் மற்றும் அதற்கு இணையான பதவியில் 147 காலியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி மூலம் பிப்ரவரி 24ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் பதவியில் 14 காலியிடங்களும், இளநிலை மின்னணு ஆய்வாளர் பதவியில் 3 பணியிடங்களும், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் பதவியில் 117 காலியிடங்களும், மீன்வள பொறியியல் துறையில் 13 உதவிப் பொறியாளர் பணியிடங்களும் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெறும்.
உதவி இயக்குநர் பதவிக்கு மெக்கானிக்கல், புரோடக்சன், எலெக்ட்ரிக்கல், புரோடக்சன், எலெக்ட்ரிக்கல், கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரிகளும், டெக்ஸ்டைல் டெக்னாலஜி பட்டதாரிகளும், இளநிலை மின்னணு ஆய்வாளர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரிகளும், உதவி இன்ஜினீயர் பதவிக்கு சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், புரோடக்சன், இண்டஸ்ட்ரியல் இன்ஜினீயரிங் பட்டதாரிகளும், பி.இ. (வேளாண்மை) பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் பாடத் தேர்வு, பொது அறிவுத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் தமிழ்வழியில் பொறியியல் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த பொறியியல் பணி தேர்வுக்கு டிசம்பர் மாதம் 16ஆம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.