Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தமிழக அரசுப் பணியில் 9,351 பேருக்கு வேலை வாய்ப்பு!

 

 

 

தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலப் பதிவேடுகள் சார்நிலைப் பணி உள்ளிட்ட பணிகளில், குருப்_4 பிரிவில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், நில அளவர் உள்பட பல்வேறு பதவிகளில் 9,351 பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே குருப் 4 தேர்வையும், விஏஓ தேர்வையும் ஒன்றாக இணைத்து, ‘ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு_4’  என்று மாற்றப்பட்டு, ஒரே தேர்வாக நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கிராம நிர்வாக அலுவலர் பணியில் 494 காலி இடங்களும், இளநிலை உதவியாளர் (பிணையம்) பணியில் 205 காலி இடங்களும், இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) பணியில் 4096 காலி இடங்களும், தட்டச்சர் பணியில் 3,463 காலி இடங்களும், சுருக்கெழுத்து தட்டச்சர் பணியில் 815 காலி இடங்களும், வரித்தண்டலர் பணியில் 48 காலி இடங்களும், நில அளவர் பணியில் 74 காலி இடங்களும், வரைவாளர் பணியில் 156 காலி இடங்களும் சேர்த்து மொத்தம் 9,351 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி (அ) அதற்கு இணையான கல்வித் தகுதி.

வயது வரம்பு

1.7.2017 நிலவரப்படி 21 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், அருந்ததியர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர் ஆகியோர் 21 வயதிலிருந்து 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

20 சதவீத இடஒதுக்கீடு

1.    இந்தப் பணியிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2.    மாற்றுத் திறனாளிகளுக்கு என்று 4 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வுக் கட்டணம்

பதிவுக் கட்டணம் ரூ.150. தேர்வுக் கட்டணம் ரூ.100. ஏற்கனவே ஒருமுறை பதிவு செய்தவர்கள் நேரடியாக தேர்வுக் கட்டணம் ரூ.100 மட்டும் செலுத்தினால் போதும். தேர்வுக் கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களிலும் கட்டலாம்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், அருந்ததியினர், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.12.2017

தேர்வு நடைபெறும் தேதி: 11.02.2018

மேலும் விவரங்களுக்கு:

www.tnpsc.gov.in ,

www.tnpscexams.net