பிறந்த குழந்தை பெண்ணாக இருந்தால் – அதைக் கழுத்தைப் பிடித்து நெரித்துச் சாகடிக்கும் இந்துமதக் கொடுமை 1870ஆம் ஆண்டுதான் சட்டம்போட்டு ஒழிக்கப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
———————————————————————————————————————————————————————–
ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன்
எனது சுயமரியாதைப் பிரச்சாரத்திற்கு பாண்டியன் ஒரு சிறந்த பெரிய ஆதரவாளராக இருந்தார் என்பதையும் நான் என்றும் மறக்க முடியாது. அவரும் அவரது குடும்பமும் என்னிடம் உடன்பிறந்த சுற்றத்தார்கள் போல் அன்பு பாராட்டி வந்ததையும் மறக்க முடியாது.
உண்மையான உள்ளம், உறுதியான நெஞ்சு, எடுத்த காரியத்தில் வெற்றி காண வேண்டும் என்கின்ற ஆர்வம் முதலிய அரிய உயர் குணங்கள் அவரிடம் இருந்தன.
– தந்தை பெரியார்
சவுந்தரபாண்டியன் அவர்களின்
நினைவு நாள்: பிப்ரவரி 22 (1953)
———————————————————————————————————————————————————————–
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்
தோழர் சிங்காரவேலு காங்கிரசையும் காந்தியத்தையும் பூஷ்வா இயக்கம் என்று ஆணித்தரமான ஆதாரங்களோடு மெய்ப்பித்தவர். நல்லதொரு நாத்திகர், கடவுளும் பிரபஞ்சமும் என்ற நூலிலே அவர் கொடுக்கும் சவுக்கடிகள் ஆத்திகத்திற்கு அதிர்வேட்டு. அவ்வப்போது குடிஅரசு, பகுத்தறிவு இதழ்களிலே கனல்கக்கும் அவரது கட்டுரைகள் ஆராய்ச்சி வழிந்தோடும் எழுத்தோவியங்கள் – முற்போக்கை அள்ளிவீசும் அறிவுத் தொகுப்புகள் நோயுற்ற திராவிடத்திற்கு நல்ல கஷாயங்களாக அமைந்தன.
– தந்தை பெரியார்
சிங்காரவேலர் பிறப்பு: பிப்ரவரி 18, (1860)