முற்றம்

பிப்ரவர் 16-28 முற்றம்

கீ கீ

அன்பை வெளிப்படுத்துவதிலும், குடும்பச் சூழலை_தாயின் மனதைப் புரிந்துகொண்டு நடந்துகொள்ளும் விதத்திலும், தைரியத்திலும் பெண் குழந்தைகளுக்கே உரிய

தனித்தன்மையைப் பேசுகிறது படம்.

தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதால், வறுமை காரணமாக வீட்டுவேலைக்கு வெளியூர் அனுப்ப இருக்கும் தாயிடம், வேலைக்குப் போகலைம்மா, படிக்க வைத்தால் ராக்கெட் வேலைக்குப் போய் காப்பாற்றுவேன் என்று கெஞ்சுகிறாள் இளம் பிஞ்சு. உடன் விளையாடும் மாணவர்கள் தங்கள் ஆசிரியருக்கு தொலைப்பேசி மூலமாகத் தகவல் தெரிவிக்கின்றனர்.

ஆசிரியர் கூறிய அறிவுரைகளை அன்னையார் ஏற்றுக் கொண்டாரா என்பதைக் குறும்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

செய்திகளை பகிர்ந்து கொள்ள: பாவெல் நவகீதன், 9840632968

– கருத்தோவியன்
—————————————————————————————————————————————-

MyScript  Stylus

தட்டச்சு செய்து பழக்கமில்லாதவர்களுக்கு தமிழில் தட்டச்சு செய்வதும், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதும்கூட தேடித் தேடி அடிக்க வேண்டியிருக்கிறது என்ற நிலையிருக்கும்போது, கையால் எழுதுவதுபோல் எழுதுவதையே எழுத்தாக திறன்பேசி புரிந்துகொண்டால் நன்றாக இருக்குமல்லவா? அதனை ஆண்டிராய்டு கணினிகளில் செய்து தருகிறது. ஆப்பிள் கருவிகளில் நேரடியாக இப்படி இல்லாதபோதும், ஸ்டைலஸ் போன்ற செயலிகள் இந்த வசதியைச் செய்து தருகின்றன. நாம் எழுதுவதை உடனுக்குடன் புரிந்துகொண்டு எழுத்துகளாக மாற்றிக் கொள்கின்றன.

http://myscript.com/stylus/  சென்று பதிவிறக்கிக் கொள்ளலாம்.
– சமா
—————————————————————————————————————————————-

நூல் அறிமுகம்

 

தலைப்பு:
கடவுளும் காரியக் கிறுக்கர்களும்
ஆசிரியர்:
கோவேத சுவாமிநாதன்
வெளியீடு:
காலம் வெளியிடு,
25, மருதுபாண்டியர் 4வது தெரு
(சுல்தான் நகர்), கருமாரியம்மன் கோயில் எதிர் வீதி, மதுரை-625002.
விலை: ரூ.80/- பக்கங்கள்: 72

கடவுள், வழிபாட்டு முறைகள் பற்றிய புதுக்கவிதை தொகுப்பு.
‘சாமிகள்லேயும்
ஏழைச்சாமி பணக்காரச் சாமிண்ணு இருக்கு’.
‘பணக்காரச் சாமிக்கு குளிச்சு விடணும்
உடுத்தி விடணும்
ஊட்டி விடணும் ஊஞ்சல் கட்டி விடணும்
விளக்குப் புடிக்கணும் விசிறி புடிக்கணும்
பிறகு கூட்….விடணும்
ஏழைச்சாமிகளோ
கஞ்சிக்குச் செத்துப் போனது மாதிரி இருக்கும்
அதுக மேல வெயிலடிக்கும் மழையடிக்கும்
நாயிக பண்ணிக எல்லாம் வந்து
ஒண்ணுக் கடிச்சாலும் அடிக்கும்’
‘ஏண்டா இப்பிடின்னு கேட்டா’
‘சாமிக எல்லாம் மனுசன் வச்சுகிட்டது தான
மேடு பள்ளம் இல்லாமலா இருக்கும்’ என்கிறான்
என் நண்பன்.
இதுபோன்ற ஏராளமான புதுக்கவிதைகளின் தொகுப்பு.
– வை.கலை

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *