கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ் நவம்பர் 13 அன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின்படி ஓரினச் சேர்க்கை குற்றம் என்றும் அதற்கு அதிக பட்சமாக ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என்றும் உச்ச நீதிமன்றம் டிசம்பர் 11 அன்று தீர்ப்பளித்துள்ளது.
ஈரான் நாடு மனிதக் குரங்கினை வைத்த பஜோஹேஜ் ராக்கெட்டினை டிசம்பர் 14 அன்று விண்ணில் செலுத்தியுள்ளது.
ஸ்டெம் செல்களிலிருந்து சிறுநீரகத்தை உருவாக்கி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ். மாணவர்கள் முதுகலைப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கும்போது கிராமப்புறங்களில் ஓராண்டு பணியாற்ற வேண்டும் என்ற விதி 2015_16ஆம் கல்வியாண்டிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.
ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா டிசம்பர் 17 அன்று டில்லி மேல்சபையிலும் 18 அன்று மக்களவையிலும் நிறைவேறியது.