இந்தியாவின் ஆகப் பெரிய வழக்கு மன்றத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் முடிவு கூறப்பட்டுள்ளது. இந்த முடிவு பலரின் எதிர்ப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சிலரின் ஆதரவும்கூட கிடைத்துள்ளது.
இந்திய நாட்டின் மாநிலங்களின், மத்திய அரசின் நேரடிப் பார்வையில் நடைபெறும் யூனியன் பிரதேசங்கள் எனப்படும் சிறு மாநிலங்களிலேயே, உயர் வழக்கு மன்றம் ஒன்றினைப் பெற்றிருக்கும் மாநிலமாக டெல்லி விளங்குகிறது. டெல்லி உயர் வழக்கு மன்றம் தந்த முடிவுக்கு எதிர்ப்பாகச் செய்யப்பட்ட மேல்முறையீட்டின் மீதுதான் ஆகப் பெரிய வழக்கு மன்றம் முடிவைக் கூறியுள்ளது.
வழக்கு, தன்பாலினச் சேர்க்கை / உறவு குற்றமா, அல்லவா என்பது பற்றியது. தகுதியான வயது உள்ள இருவர் தனித்து உறவு கொண்டிருந்தால், அது குற்றமாகக் கருதப்படக் கூடாது என்பது உயர் வழக்கு மன்றத்தின் முடிவு. இப்படிப்பட்ட உறவைக் குற்றம் என்றும் அதற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இ.பி.கோ பிரிவு 377 கூறுகிறது. அதன்படி தண்டனை 10 ஆண்டுகள் என்கிறது.
மெக்காலே எழுதியது
இ.பி.கோ. எனப்படும் இந்தியக் குற்றவியல் சட்டம் ஆங்கிலேயர் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டத்தை எழுதியவர் லார்டு மெக்காலே. இந்தியாவின் கல்வித் திட்டத்தை உருவாக்கியவரும் இவரே. 1837இல் இ.பி.கோ.வை எழுதித் தந்தார். 1860 முதல் அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எழுதிய காலத்தின் நிலைக்கேற்ப குற்றங்கள் குறிக்கப்பட்டு, தண்டனைகளும் கூறப்பட்டன.
19ஆம் நூற்றாண்டின் பழக்க வழக்கங்கள் 21ஆம் நூற்றாண்டில் பல மாறுதல்களைப் பெற்றுவிட்டன உலகம் முழுவதும்! இந்திய நாடும் மக்களும் அதற்கு விலக்கல்ல. எனவே, சில சட்டங்கள் திருத்தப்பட வேண்டும், நீக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கைகள் மக்களிடமிருந்து எழுப்பப்பட்டன. அவற்றில் பல ஏற்கப்பட்டன. சில ஏற்கப்படவில்லை. அப்படி எழுப்பப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றுதான் தன்பாலின உறவு தண்டிக்கப்படக் கூடிய குற்றமாக்கப்படக் கூடாது என்பது! அதற்காக இ.பி.கோ. 377 தக்கவாறு திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி உயர் வழக்கு மன்றம் ஏற்றது. 2009ஆம் ஆண்டில் ஏற்கப்பட்ட கோரிக்கையை ஆகப் பெரிய வழக்கு மன்றம் 2013 இறுதியில் நிராகரித்து நீக்கிவிட்டது. இன்றைய நிலையில் பழைய சட்டமே நீடிக்கிறது. தன்பாலின உறவு குற்றம், அதற்குத் தண்டனை என்ற நிலை மீண்டும் ஏற்படுத்தப்பட்டு விட்டது.
அவசரக் கோலத்தில்…
முடிவை எழுதிப் படித்த நீதிபதி(ஜி.எஸ்.சிங்வி) தனது பதவிக்காலத்தின் கடைசி நாளில் இதை அறிவித்துள்ளார். அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த முடிவு என்கிறார்கள் சட்டம் கற்றோர். உயர் வழக்கு மன்ற முடிவு இ.பி.கோ. 377 பிரிவு முழுவதுமாக நீக்கப்பட வேண்டும் எனக் கூறவில்லை, அப்பிரிவில் பலவகைக் குற்றங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் மனச் சம்மதத்துடன், மனமகிழ்வுக்காக வயது வந்தவர்கள் தனித்த முறையில் உறவு கொள்வது மட்டும் குற்றமாக்கப்படக் கூடாது என்றுதான் குறிப்பிட்டுள்ளது. ஆகப்பெரிய வழக்கு மன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவான் (டைம்ஸ் ஆப் இந்தியா 13-_12_13). வல்லுறவு, சிறுவர்களுடன் உறவு கொள்ளுதல், விலங்குகளுடன் உறவு கொள்ளுதல் ஆகியவை உயர் வழக்கு மன்ற முடிவின்படியும்கூட, தண்டிக்கப்படக் கூடிய குற்றங்கள்தான் இன்றளவும்! ஆகப் பெரிய வழக்கு மன்றம் இதனைக் கவனிக்கவேயில்லையே, என ஆதங்கப்படுகிறார் ராஜீவ் தவான்! முடிவைக் குறைகூறுவதோ, முடிவெடுத்தவரின் உட்கருத்தை உற்றுப் பார்ப்பதோ, கட்டுரையின் நோக்கம் அன்று! மாறாக, முடிவெடுக்கக் கூறப்பட்ட காரணம் இருக்கிறதே, தன்பாலின உறவு என்பது இயற்கையின் கட்டளைக்கு மாறானது என்று இருக்கிறதே, அது சரியானதுதானா என ஆய்வது மட்டுமே! மதங்கள் மறைந்தன மெக்காலேயின் இ.பி.கோ. வருவதற்கு முன் இந்தியாவில் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே முடிவுகள் கூறப்பட்டு தண்டனைகள் அளிக்கப்பட்டன. இந்துக்களுக்கு மனுசாத்திரம், இசுலாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் அவரவர் மதச் சட்டங்கள் அடிப்படை! ஆளுக்கொரு மாதிரியான சட்டம் இருந்ததால், முடிவுகளும் ஆளுக்குத் தக்க மாதிரி இருந்தன. அதனை மாற்றி ஒரே சீரான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில்தான் இ.பி.கோ. எழுதப்பட்டது. மனு சாத்திரப்படி கொலை செய்த பார்ப்பனனுக்கு தலைமயிரை மொட்டை அடிக்க வேண்டியது மட்டுமே தண்டனை! மற்றையோர்களுக்கு சிரச்சேதம். இந்த முறை இ.பி.கோ வந்த பிறகு ஒழிந்தது. அதனாலேயே ஆர்.எஸ்.எஸ் இன்றளவும் மெக்காலேயைக் கரித்துக் கொட்டுகிறார்கள். இயற்கையின் கட்டளையை மக்களுக்கு அறிவித்தது யார்? கடவுளா? மதங்களா? மத நூல்களா? ஆகப் பெரிய வழக்குமன்றம் விவரிக்கவில்லை! கிறித்துவத்தின் கடவுள் கூறிய முதல் கட்டளையையே முதல் மனித ஜோடி (ஆதாம், ஏவாள்) மதிக்கவில்லையே! மதிக்காமல் உடல் உறவு கொண்டு காயீன், ஆபேல் என்ற பிள்ளைகளைப் பெற்றார்கள்? இந்த எதிர்ப்புப் போக்கை யூத, இசுலாமிய மதங்களும் ஏற்று தத்தம் மத நூல்களில் எழுதி வைத்துக் கொண்டுள்ளனவே! இயற்கை எழுச்சியே இன்ப நுகர்ச்சி இயற்கையானது. மனதில் தோன்றுவது. மூளையின் செயல்பாடுகளால் கிளர்ந்து எழுவது. அது இப்படித்தான், இந்த உறுப்புகளால்தான், இன்னாருடன்தான் என்றெல்லாம் மனம்தான் முடிவு செய்கிறது. விலங்குகள் எவையும் எவற்றுடனும் உறவு கொண்டு இனப் பெருக்கம் செய்கின்றன. மனிதர்களும் அதே போலவே இருந்துதான், வளர்ச்சி அடைந்து இன்னாருக்கு இன்னார் என்று வந்தபிறகும் பல மனைவிகள், பல கணவர்கள் என்றெல்லாம் நிலைமைகள் இருக்கின்றனவே! இன்ப நுகர்வு இதற்குக் காரணி என்றாலும் யார் கட்டளையை யார் மீறினார்கள் என்று கூறமுடியுமா? தந்தையுடன் மகளும் தாயுடன் மகனும் உறவு கொண்ட செயல்கள் பரவலாக இருப்பதால்தான் உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃபிராய்டு அதற்கு ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் எனப் பெயர் வைத்து, கிரேக்கப் பழங்கதைக் காலங்கள்தொட்டே இது இருந்து வருகிறது என்பதை அம்பலப்படுத்தினார். இந்நிகழ்வுகளில் யார் கட்டளையை எப்படி மீறினார்கள்?
இந்துப் பழங்கதையில்கூட, பிரம்மா தன் மகள் சரசுவதியைப் பல ஆண்டுக்காலம் புணர்ந்தது குறிப்பிடப்பட்டு உள்ளதே! அப்பன் புணர்ந்த மகளான சரசுவதியைப் பின்னர் அவளது சகோதரன் சுயம்பு வைத்துக் கொண்டிருந்தது எழுதப்பட்டிருக்கிறதே! இவர்களுக்கு இயற்கைக் கட்டளை கிடையாதா? இவர்கள் மட்டும் இயற்கைக் கட்டளையை மீறலாமா? கடவுள்கள் செய்ததை இயற்கைக் கட்டளை என்று எடுத்துக் கொண்டால் என்னாவது? பதவிக் கூழுக்குப் பேசும் பேச்சா? கூழுக்குப் பாடிய _ வறுமையில் வாடிய புலவர்களைப் போல, பதவிப் பசியால் வாடும் பேச்சு வியாபாரி வக்காலத்துப் போட்டு வாதம் செய்கிறாரே, அவர் என்ன பதில் கூறுவார்? பேச்சு வணிகர் போய்க் கொண்டிருக்கும் மாளிகையைச் சேர்ந்த ஜவடேகர் என்பாரிடம் கருத்துக் கேட்டபோது சிவ, சிவா என்று கூவிக் கொண்டே தாடையில் போட்டுக் கொண்டு காதைப் பொத்திக் கொண்டாராம்! அவர் கூப்பிட்ட சிவன் கதை என்ன? தன்பாலினப் புணர்ச்சியில் ஈடுபட்டவன் தானே! அரிகர புத்திரன் _ அய்யப்பன் _ வந்த விதம் அந்தப் புணர்ச்சியால் தானே! நீர்த்தூங்கி எனப் பொருள்படும் நாராயணன் மூவுலகும் சுற்றிவரும் சோம்பேறி நாரதனைப் புணர்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றதும் தன் பாலினப் புணர்ச்சியின் மூலம்தானே! ஒருதலை உணர்வல்ல இயற்கைக் கட்டளை என்று ஆகப் பெரிய வழக்குமன்றம் கூறியதை கடவுள்களே மீறலாமா? அரிகரப் புணர்ச்சிக்கு அரன் ஆசை மட்டுமே காரணம்! 60 வருடப் பிள்ளைகளைப் பெற்றதற்கு நாரதனின் ஆசை மட்டுமே காரணம்! ஆனால் டெல்லி உயர் வழக்குமன்றம் இருவரும் விரும்பி, மனமொத்து, கொள்ளும் விருப்ப உறவைக் குற்றம் எனக் கூறாதே என்றுதான் கூறியது. புலன் நுகர்ச்சி, காம உணர்ச்சி போன்றவையே இத்தகைய உறவுக்குக் காரணம்! மலரினும் மெல்லிய காமம் காரணி! எனில், எப்படித் தவறெனக் கூறலாம்?
அந்த நாள் முதல்…
திருமணமாகாத கன்னிப் பெண்களுடன் கலவி செய்திட, பெற்ற தந்தை விருப்புடன் கூறிய போதும், ஆண்களுடன் கலவி செய்த விருந்தாளிகளின் வரலாற்றை யூத, கிறித்துவ மதங்களின் நூலான ஆதியாகமம் கூறுகிறது.
SODOM என்ற ஊரில் இது நடந்ததால் அந்தப் புணர்ச்சிக்கு SODOMY என்றே பெயர் வைத்துவிட்டது இங்கிலீஷ்! ஆக, எது இயற்கைக் கட்டளை? கோனார்க் (ஒடிசா), கஜூரஹோ (பிகார்) கோவில்களில் வடிக்கப்பட்டிருக்கும் கலை அழகு ததும்பும் கற்சிலைகளிலும்கூட, தன்பாலின உறவுப் படிமங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றனவே! பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே வடிக்கப்பட்டவை இவை! அப்படி என்றால், இயற்கைக் கட்டளை மீறப்பட்டும் அத்தனை நூற்றாண்டுகள் ஆகிவிட்டன என்றுதானே ஆகிறது?
ORAL SEX எனப்படும் வாய்வழிக் கலவி, இ.பி.கோ 377இன்படி குற்றமல்ல என்று சட்டம் கொண்டுவந்த பிரிட்டிஷார் ஆண்ட காலத்திலேயே 1886இல் ஒரு முடிவும் 1925இல் ஒரு முடிவும் உயர் வழக்கு மன்றங்களில் கூறப்பட்டுள்ளன. பின்னரும்கூட, 2013இல் இப்படி ஒரு முடிவு என்றால்…? 2006இல் எடுக்கப்பட்ட கணக்கின்படி, 25 லட்சம் பேர் தன்பாலின உறவில் ஈடுபடும் நபர்கள், இவர்களின் உணர்வை, உரிமையை, மிகமிகச் சிறுபான்மையர் எனக்கூறி ஆகப் பெரிய வழக்கு மன்றம் புறந்தள்ளிவிட்டு, அவர்கள் செய்வது குற்றம் என்றால் என்ன அநீதி! இன்றைய நிலை இதுவே இ.பி.கோ. 377 கொண்டுவந்த பிரிட்டனில் ஒரே பாலினத் திருமணங்கள் சட்டப்படி செல்லத்தக்கன என்றே சட்டம் வந்துள்ளது. 2014 மார்ச் மாதம் 29ஆம் நாள் முதல் அச்சட்டம் நடைமுறைக்கு வருகிறது. ஒரே பாலினத் தம்பதியர்க்கு தேவாலயத்தில் ஆசீர்வாதம் வழங்க வேண்டுமென இங்கிலாந்தின் சர்ச்சுகளுக்கான ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மூன்று மாதங்களில் அங்கேயே தலைகீழ் மாறுதல்கள் நடக்கும் என்கிறபோது இங்கே, இந்தியாவில்…? இவர்கள் என்ன பிரிட்டிஷ் ராணியை விஞ்சிய ராணி விசுவாசிகளா? எனும் கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லையே! மேல்முறையீட்டு வழக்கில் எல்லாம் முடிந்து தீர்ப்புக்கான தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது 27.3.2012இல்! 20 மாதங்கள் இருந்துவிட்டு 21ஆம் மாத மத்தியில் முடிவு அறிவிக்கப்படுகிறது. அந்த முடிவு பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத முடிவாக அமைந்துவிட்டது. முடிவைக் கூறியவர் மறுநாள் பிறந்தநாள் கொண்டாடி விட்டார். நம்மால் முடிவைக் கொண்டாட முடியவில்லை. பாரதத்தில் லெஸ்பியன் கங்கை நதி ஆகாயத்தில் இருந்ததாம். அதனைத் தரைக்குக் கொண்டு வந்து, இன்று ஓடிக்கொண்டிருக்கும் நிலையை உருவாக்கியவன் பகீரதன். அவன் செய்த கடும் தவத்தால் இது நடந்ததாம். அவன் இதற்காக எடுத்த முயற்சிகளைப் பகீரதப் பிரயத்தனம் என்பார்கள். மாமல்லபுரத்தில் அவனுடைய தவம் கல்லிலே வடிக்கப்பட்டு விளங்குகிறது. அந்த பகீரதனின் பெற்றோர் திரிதரன் எனும் அயோத்தி மன்னனின் மகள்கள்! ஆம், இரு பெண்களும் ஒரே கட்டிலில் கட்டிப் பிடித்துப் படுத்து இருந்ததால் பிறந்தவன்தான் பகீரதன்! இங்கேயும் தன்பாலினப் புணர்ச்சிதான். லெஸ்பியன் எனப்படுபவர்கள் மற்றைய நாடுகளில்! இந்தியாவிலும் உண்டென்பதற்கு அய்ந்தாம் வேதமான பாரதமே சாட்சி! இந்த வகையில் இயற்கைக் கட்டளையை மீறியதற்குத் தூண்டுகோல் யார்? எது? இன்ப நுகர்வுணர்ச்சி தானே! எப்படி இது குற்றமாகும்? தன்பாலின உறவு பாரதம் எழுதப்பட்ட காலத்திலேயே இருந்திருக்கிறது. கடவுள்களாலேயே கடைப் பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது எப்படி இயற்கைக் கட்டளையை மீறியதாகும்?
இந்து மத யோக்யதை இ.பி.கோ. 377 விலங்குகளுடனான புணர்ச்சியைத் தண்டிக்கத்தக்க குற்றம் என்கிறது. சரி! தன்பாலின உறவு மலிந்து இருந்த இங்கிலாந்தில் 1260ஆம் ஆண்டு முதல் சட்டம் இருந்துள்ளது. 18ஆம் நூற்றாண்டில் எண்ணிக்கையும் பெருகி தண்டனையும் கடுமையானது. பலரும் பாதுகாப்பான இடம் என்று இந்தியாவுக்கு வந்து அந்தக் குற்றத்தைச் செய்ததால் இங்கும் அதே சட்டத்தை அமல் செய்து விட்டனர். ஆனால், விலங்குப்புணர்ச்சி இங்கே, புண்ணிய பாரத பூமியில் நிறைய இருந்ததால் சட்டப் பிரிவில் இதனையும் சேர்த்துவிட்டனர். சரியானதே! விலங்குப் புணர்ச்சியில் பிறந்த முனிபுங்கவர்கள்தான், இந்து மதத்தினர்களுக்கு ஒழுக்கம், நீதி, முறை, கடவுள்/இயற்கைக் கட்டளைகள் போன்றவற்றைக் கற்பித்தனர். மானைப் புணர்ந்து பெற்ற கலைக்கோட்டு முனி, நரியைப் புணர்ந்து பெற்ற ஜம்புக ரிஷி, பசுவைப் புணர்ந்து கவுதம ரிஷி, தவளையைப் புணர்ந்து மாண்டவ்ய முனி, முதலையைப் புணர்ந்து கார்க்கேய முனி, நாயைப் புணர்ந்து சவுநக ரிஷி (பட்டியல் நீளூம்) முதலியோர் பிறந்துள்ளனர். ஆகவே இந்தச் சட்டப்பிரிவு இந்தக் குற்றங்களைத் தண்டிக்கலாம். மாறுவதே மாறாதது இயற்கைக் கட்டளைப்படி கலவி செய்வது மனித இன விருத்திக்குத்தான்.
இன விருத்தியை மட்டும் மனதில் வைத்து புணர்ச்சியில் ஈடுபடுவது, ஓரறிவு உயிர் முதல் அய்ந்தறிவு உயிர் வரை உள்ளவற்றிற்கு இயற்கை. ஆனால் ஆறறிவு மனிதனுக்கு அப்படி அல்லவே! இனப் பெருக்கத்தைப் பின்தள்ளி, மன மகிழ்ச்சியை முன்நிறுத்தி உறவில் ஈடுபடுவதுதான் மனிதனின் இயல்பு, வழக்கம், இயற்கை! ஈர்ப்பு எதிர்பாலிடத்து ஏற்படுவதுபோல் சிலருக்குத் தன் பாலிடத்து ஏற்படுகிறது! சிலருக்கு இருவகைகளிலும் ஈர்ப்பு ஏற்படுகிறது! இது எப்படித் தவறு? இது எப்படிக் குற்றம்? காலம் மாற, மாற, கருத்துகளும் மாற வேண்டுமே! கால, தேச, வர்த்தமான என்று இதைத்தானே இங்கே கூறுகிறார்கள்? அறிவு வளர, வளர, அறிவியல் வளர, வளர அணுகுமுறைகளும் மாறவேண்டுமா, இல்லையா? மாறுவதுதானே, மாறாதது!
இதைச் செய்கின்றனரே
ஆண் பெண் குறிப் புணர்ச்சி (PENOVAGINAL) என்பது இனப் பெருக்கத்துக்கு வழி. இருந்தும் கருத்தரிக்க முடியாத குறைபாடு உள்ளவர்களுக்குச் செயற்கை முறைக் கருத்தரித்தலை அறிவியல் தந்துள்ளது. மதத்தையும், கடவுளையும், இயற்கைக் கட்டளையையும் புறந்தள்ளி _ தேவைப்படுவோர் செயற்கைக் கருத்தரித்தலை ஏற்றுக்கொள்கின்றனரே! விலங்குகளுக்கும் செய்விக்கின்றனர்.
எங்கே போனது இயற்கைக் கட்டளை! அறிவியல் கண்டுபிடிப்பு இல்லாத நிலையில் யாருடனும் புணர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் _ ஒரே நிபந்தனையாக குறியில் நெய் தடவிக்கொள்ள வேண்டும் என்கிறதே மனுசாத்திரம்! இயற்கைக் கட்டளைக்கு எதிரானது அல்லவா? அக்காலச் சமூகம் ஏற்றுக் கடைப்பிடித்தது என்றால்… எது கட்டளை? மதநூல் எழுத்துகளா? மனிதத் தேவைகளா? குளோனிங் முறையில் டாலி ஆடு (DOLLY) உருவாக்கப்பட்டபோதுகூட இயற்கைக் கட்டளையைக் காட்டி எதிர்த்தார்கள். பின் அடங்கிப் போனார்கள். பலவகை விலங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கி இறுதியாக மனிதக் குழந்தையை உருவாக்கும்போது மீண்டும் எதிர்ப்புக் காட்டினார்கள். கடவுளிடம் விளையாடுகிறீர்களா? (ARE YOU PLAYING GOD?)” என்றே கேட்டார்கள். கமுக்கமாக அதுவும் நடந்து முடிந்துள்ளது என்பது செவிவழித் தகவல்.
அறிவியல் வழியே வேறு
ஆக இவர்கள் கூறும் இயற்கைக் கட்டளை பலவீனமானது. டிசம்பர் 13ஆம் நாள் செய்தியின்படி, ஆணின் விந்தணு சேர வேண்டிய திக்கில் பயணிக்காமல் வீணாகிப் போகும் விரயத்தைத் தவிர்க்கக் கூடிய (BIO ROBOT) பயோ ரோபாட் கண்டுபிடித்துள்ளார்கள்.
விந்தணுவை ஒழுங்காகச் செல்லச் செய்து, செலுத்தச் செய்து கருத்தரிக்க மாபெரும் உதவியைச் செய்யும். இங்கேயும் இயற்கைக் கட்டளையின் இடுப்பு உடைக்கப்படுகிறது. இது அறிவியல் உலகம். அறிவியல் வேகத்திற்கு ஈடாகப் பயணம் செய்யாதவர்கள் காட்டு விலங்காண்டிக் காலத்திற்குத் தள்ளப்படுவார்கள். ஆகப் பெரிய வழக்கு மன்றத்தின் சிலர் இதனை உணர்ந்து செயல்படும் காலம் விரைந்து வரவேண்டும்! மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே எழுதியதைப் போல (டுவிட்டரில் காண்க) இன்றைக்கு இ.பி.கோ.377 என்பார்கள்.
நாளைக்கு நாத்திகம் என்பார்கள். அப்புறம் கருப்பு உடையை சனிக்கிழமையில் அணியாதே என்பார்கள். இது என்ன கோமாளித்தனம் என்று கேட்கிறார். ஒரு தனிமனிதனின் கருத்து சட்டம் என்றாகிற நிலை. ஒரு வழக்கு மன்றம் ஒரு மாதிரி, வேறு வழக்கு மன்றம் வேறு மாதிரி என்றால், நாட்டில் அறமன்றமே கிடையாது போல் இருக்கிறதே!
வரலாற்றில் தன்பாலின உறவு
சாக்ரடீஸ், அவரது மாணவன் பிளேட்டோ ஆகியோர் தன்பாலின உறவு கொண்டவர்கள் என வரலாறு கூறுகிறது. அதுபோலவே, இந்துத்வா என நூல் எழுதி இந்துமத வெறியைக் கிளப்பி அதன் விளைவாக இந்தியா இரண்டாகப் பிரிக்கப்பட காரணியாய் அமைந்துவிட்ட விநாயக தாமோதர் சாவர்க்கர் கூட, தன்பாலின உறவுக்காரர் என்றே நள்ளிரவில் சுதந்திரம் (FREEDOM AT MIDNIGHT) நூலின் 417ஆம் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. (முதல் பதிப்பு _ ஜூலை 1976). எனவே மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி இன்றளவும் மனிதர்களால் செய்யப்பட்டு வரும் உறவு இயற்கைக் கட்டளையை மீறும் செயலாகும். இதுதான் அறம் திருமணச் சடங்குகள் எதனையும் கைக்கொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் தன்மையைச் சட்டப்பூர்வ தம்பதியினர் எனும் தகுதி பெற்ற உறவு என்று எழுதிய அறமன்றங்கள் இங்கே இருக்கின்றன. அவர்கள் பிரிய நேர்ந்தால் அதனை ஏற்று சடங்குகளின்படி செய்து கொள்ளப்பட்ட இணையர் பிரிய நேர்ந்தால் என்ன நிலையோ அதே நிலை இவர்கட்கும் உண்டு என்று தீர்வுகண்ட அறமன்றங்கள் இங்கே உண்டு. தன்னை வளர்த்த தந்தையின் மனைவியுடன் (ராதா) வாழ்ந்த கடவுள் கிருஷ்ணனையே உதாரணமாகக் காட்டி இத்தகைய தீர்வுகளை அம்மன்றம் கூறியது. ஆகப் பெரிய வழக்கு மன்றத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் எழுதிய அறக் கருத்துகள் அவை.
இன்று எங்கே அத்தகைய தீர்வு? அறம் ஆளுக்கு ஆள் மாறுமா? எனில் அது அறமா? முடிவா? இத்தகைய முடிவுகள் வேண்டா. அறநெறிகளே தேவை! அறமன்றங்கள்தான் தேவை! இரண்டு பேருக்குக் கொடுமை மிகப் புகழ் பெற்ற எழுத்தாளரான ஆஸ்கர் வைல்டு, கணினி அறிவியலின் தந்தை எனப்படும் ஆலன் டூரிங் ஆகியோர் தன்பாலின உறவு கொண்டமைக்காகத் தண்டிக்கப்பட்டார்கள். சீரிய பகுத்தறிவாளரான அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் எடுத்த முயற்சிகளின் விளைவாக 2009இல் பிரிட்டிஷ் அரசு அநீதியான தண்டனைக்காக மன்னிப்புக் கேட்டது. தண்டிக்கப்பட்ட ஆஸ்கர் வைல்டு சிறைக்குப் போனார். சிறைக்குப் போனால் தன் ஆராய்ச்சி தடைப்படும் என்பதால் ஆலன் டூரிங் தன் ஆண்மைத் தன்மையை இழக்க வேதியியல் வழி தண்டனையை மேற்கொண்டார்.
எனினும் நிலைகுலைந்து போய் ஆய்வையும் மேற்கொள்ள முடியாமல் போனார். அரசு கேட்ட மன்னிப்பினால், என்ன பரிகாரம் ஏற்பட்டது? ஏற்பட முடியும்? என்றாலும் மன்னிப்புக் கேட்டார்கள்! அவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். இங்கேயோ இந்தியர்கள்! மன்னிப்புக்கூடக் கேட்க மாட்டார்கள்! எனவே, ஏற்படுவது நிரந்தரப் பாதிப்புதான்! வழக்குமன்றம் முடித்துக் கொண்டு விட்டது. சட்டமன்றம்தான் இனிமேல் கவனிக்க வேண்டும். மக்கள் மன்றம்தான் அதனைத் தூண்ட வேண்டும்!
Leave a Reply