“சர் தியாகராயர் தோன்றி திராவிடப்
பெருங்குடி மக்களுக்
குத் தலைமை பூண்டு
அவர்களின் தன்னு
ணர்விற்கு வழிகோலி
அவர்களின் வாழ்வில் இருந்து வந்த
அடிமைத்தனத்தை அகற்றப் பாடுபட்டு சமுதாயத்
துறை, பொருளாதாரத்துறை, அரசியல்
துறை ஆகியவற்றில் நல்லிடம் பெற்றிட உழைத்
தார். நமது பண்டைப் பெருமைகளையும் அவரால் உணர முடிந்தது. அன்று தியாகராயர் திராவிடப்பெருங்குடி மக்கள் முன்னேற வேண்டுமென்று பாடுபட்டதன் பலனை இன்று காண்கிறோம்.
தியாகராயர் பெரிய செல்வந்தர், பணம் படைத்தவர். தியாகராயர் விரும்பினால் வியாபாரத்தின் மூலம் பல இலட்சம் ஈட்டியிருக்கலாம்.
அவர் விரும்பியிருந்தால் சென்னையிலேயே பெரும்பாலான இடங்களைச் சொந்தமாக வாங்கியிருக்க இயலும்.
அவர் இவைகளையெல்லாம் பெரிதாக
மதிக்கவில்லை. தம்முடைய சமூகத்
தொண்டைத்தான் ஒரு பொருட்டாக
மதித்தார். திராவிட சமூகத்தில் ஒரு பெரிய
விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார். அரசியலிலே நம்மவர்கள் முதலிடம் பெற வேண்டுமென்று அவர் விரும்பினார். தியாகராயர் போக போக்கியத்தை விட்டுத் தாமாகவே கல்லும், முள்ளும்,
காட்டாறும், கருங்குழியும் நிரம்பிய பாதை வழியே செல்லத் தொடங்கினார்.
“அவர் களத்திலே தூவிய விதை நன்றாக வளர்ந்திருக்கிறது. அவர் அன்று பறக்கவிட்ட சமுதாயப் புரட்சிக் கொடியின் கீழ் நின்றுதான் நாம் இன்று பணியாற்றி வருகிறோம்.”
– பேரறிஞர் அண்ணா