வெள்ளுடை வேந்தர் என்று அழைக்கப்படுதவதற்கு காரணம் சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக சர்.பிட்டி.தியாகராயர். இருந்த போது வேல்ஸ் இளவரசர் சென்னை வருவதாக இருந்தது. உடனே அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் வெல்லிங்டன் பிரபு தியாகராயரிடம்,””சென்னையின் முதல் பிரஜை என்ற முறையில் நீங்கள்தான் இளவரசரை வரவேற்க வேண்டும். அதற்கான சிறப்பு ஆடைகளைத்தான் உடுத்தி வர வேண்டும்” என்று கூறினார்.
ஆனால் இதனை ஏற்காத தியாகராயர், வெலிங்டனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில்,”எனது வெள்ளைத் தலைப்பாகை, வெள்ளைக் கோட்டு, வெள்ளை வேட்டி, இதனோடு இளவரசர் என்னைப் பார்க்க விரும்பினால், நான் அவரை வரவேற்கிறேன். இல்லையென்றால் வேறு யாரேனும் அவரை வரவேற்கட்டும். இளவரசரானாலும் அவருக்காக என் வழக்கமான இயல்பையோ, உடைகளையோ மாற்றிக் கொள்வதற்கில்லை” என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். இதனை ஏற்ற ஆங்கில அரசு வழக்கமான உடையிலேயே அவர் விழாவில் கலந்து கொள்ளவும் இளவரசரை வரவேற்கவும் சம்மதித்தது.