“தென்னாட்டிலிருக்கிறவர்கள் இந்தியைப் படிக்கிற காரணத்தால், வட நாட்டில் இருக்கிறவர்கள் தென்னாட்டு மொழியைப் படிக்க வேண்டும் என்று வைத்தார்களே – அது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறதா? இல்லையே! அது நடைமுறையில் வராது. மூன்று மொழி என்பது சிறார்களுக்கு எவ்வளவு சுமை! அது தேவையா? என்ன பயன்? இனத்தை உயர்த்துவதற்கு அவர்களுடைய தாய்மொழி, உலகத் தொடர்பிற்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் ஆங்கிலம் என்று சொல்லக்கூடிய இருமொழிக் கொள்கைதான் நடைமுறைப் படுத்தக்கூடியது. இந்த நிலையை மாற்றி, மும்மொழித் திட்டத்தைத் கொண்டுவரப் பல தந்திரங்களைச் செய்கிறார்கள். புதிய எஜமானத்துவத்தை, ஆதிபத்தியத்தை உண்டாக்க நினைக்கிறார்கள்.”
– தமிழர் தளபதி கி.வீரமணி 2-3-1986
நூல்: “புதிய கல்வித் திட்டம்