நாவலர் இரா.நெடுஞ்செழியன் நினைவு நாள் : 12.01.2025

2025 Uncategorized கட்டுரைகள் ஜனவரி-1-15-2025

“நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் திராவிடர் கழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராக மாணவப் பருவம் தொட்டே திகழ்ந்து வந்தவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அவர் மாணவராகச் சேர்ந்து படித்த காலத்தில், நாவலரும் இன்றைய இனமானப் பேராசிரியரும் சமகால மாணவர்கள்.

நாவலர் அவர்களின் சொற்பொழிவு ஆழமும், வீரமும். துடிப்பும்.. மிகுந்தவையாகும். எழுத்தும், புள்ளிவிவரமும் சரித்திரச் சான்றுகள் கொண்டவையாகும்.

சீரிய பகுத்தறிவாளராகவே இறுதிவரை வாழ்ந்தவர் நாவலர். அவரது அரசியல் மாற்றங்கள் அவரைப் பகுத்தறிவுக் கொள்கை
யிலிருந்து திசைதிருப்பவே இல்லை என்பது அவரது தனிச் சிறப்பு.

– ஆசிரியர் கி.வீரமணி