“சத்தியமூர்த்தி லஞ்சம் வாங்குகிறாராமே?” என்று போகிற போக்கில் சிலர் சொல் லிவிட்டு போய்விடுவார்கள். இதை அவரிடமே நேரில் சொன் னேன். அவர் கொஞ்சம்கூட என் மீது கோபப்படவில்லை. நிதானமாக பதிலளித்தார்.
“நாள் பூராவும் வேலைசெய்யவேண்டும். எங்கேயாவது பஞ்சாயத்து தேர்தல் என்றால் கூட அதற்கு மேளம் வாசிக்க சத்தியமூர்த்தி வர வேண்டும்.
நான் பணக்காரனில்லை.நான் எப்படி சாப்பிடுவது? தேர்தல் தம்பட்டம் அடித்துவிட்டு நானும் என் குடும்பத்தினரும் வாயு போஜனம் செய்ய முடியுமா? யாராவது ஒரு பணக்காரனுக்கு அசெம்பளியில் கேள்விகேட்க வேண்டியிருக்கும்.அவனிடம் பணம் இருக்கிறது. என்னிடம் கேள்விகேட்கும் திறமை இருக்கிறது.
எப்பொழுதாவது இதை செய்தால் லஞ்சம் ஆகுமா?” என்று கேட்டார் சத்தியமூர்த்தி.
(பார்ப்பனர்களால் நடத்தப்பட்ட “பாரததேவி” 8.12.1943 இதழில் வெளிவந்த இச்செய்தியை குடியரசு 18.12.1943 ல் வெளியிட்டது.)