முற்றம்

நவம்பர் 16-30 முற்றம்

இணையம்
www.tamilnool.com

 

உலகின் மிகப்பெரிய தமிழ் நூல் அங்காடி என்னும் முன்னுரையுடன் தோன்றும் இணையதளம். 36 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் நூல்கள் இந்த அங்காடியில் விற்பனை செய்யப் படுகின்றன. தலைப்புவாரியாக நேர்த்தி யான முறையில் தொகுத்து அளிக்கப்பட் டுள்ளது. ஆசிரியர், தலைப்பு, பாடவகை என பிரிக்கப்பட்டு தொகுத்துள்ளது சிறப்புக்குரியது. தேவையான நூல்களைத் தேடிட தனியே ஒரு பக்கம் தரப்பட்டு அவற்றை மின்னஞ்சல்மூலம் அனுப்பி வாங்கிக் கொள்ளலாம். ஈழத்திலிருந்து வெளிவரும் நூல்கள் பெருமளவு இடம் பெற்றுள்ளன. தமிழ்க் குறுந்தகடுகள், மின் நூல்கள், காந்தளகம் நூல்கள் ஆகிய தனிப்பிரிவுகளும் பயனளிப்பவை.

நூல்

உய்!ஜென் உபதேசங்களிலிருந்து…

ஆசிரியர்:    மித்ரபூமி சரவணன்
வெளியீடு:    விதை,
வள்ளலார் புத்தக நிலையம்,
161, வீரபத்திர வீதி,
வ.வு.சி.பூங்கா சாலை,
ஈரோடு-_638003
பக்கங்கள்:    128    ரூ.90/-_

ஜென் பவுத்தக் கதைகள் அளவில் சிறிதாக ஆனால்,ஆழம் நிறைந்த கருத்துப் புதையலாக இருப்பவை.சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் அதன் கலை.ஓசோவைக் கற்றுவரும் இந்நூலாசிரியர் அதனின் கருத்துகளை எடுத்து வைக்க முயன்றுள்ளார். புத்தரின் போதனைகளை தான் வாழ்ந்த காலத்திய மனிதர்களுக்கு அவர்கள் உணரும்வகையில் உணர்த்தியவர் ஓஷோ.

உய், சரணாகதி, பூ, பாதை, செய்தி, தன்மை, உண்மை, வெறுமனே, சருகு, தான், ஆமாம், உள்ளே, ஒப்பீடு, ஆடை, விழிப்பு என 15 பொருள் குறித்து கவிதை போல தொடங்கி கருத்துக் கட்டுரைகளை இந்நூல் தாங்கியுள்ளது. இளமைக்கு எதிர்மறையானது தான் முதுமை. ஆனால் முதுமை எங்கிருந்து வருகிறது?இளமைதானே காலப்போக்கில் முதுமையாக மாறிவிடுகிறது -இந்நூலின் செறிவுக்கு இது ஓர் உதாரணம்.

 

தகவல் தளம்
www.tn.gov.in

இது தமிழ்நாடு அரசின் இணையதளம்.தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அரசின் தகவல்களை அளிக்கிறது. ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், அரசுச் செயலாளர்கள்,துறை இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களின் முகவரி, தொலைபேசி,தொலைநகல், மின்னஞ்சல் முகவரி இடம்பெற்றுள்ளன.அரசுத்துறைகளின் பணிகள்,கொள்கை விளக்கக் குறிப்புகள், இணையதளங்களின் இணைப்புகள், படிவங்கள், விண்ணப்பங்கள், இணையவழி சேவைகள், தொலைபேசி எண்கள், அரசாணைகள், அறிவிக்கைகள், நிதிநிலை அறிக்கை,தகவல் பெறும் உரிமைச் சட்டத் தகவல்கள், மக்கள் சாசனம்,அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்த அடிப்படைத் தகவல்கள், அரசின் சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள்,அரசின் செய்தி வெளியீடுகள், ஒளிப்படங்கள் என அரசு சார்ந்த அனைத்துத் தகவல்களையும் தரும் ஒரு முழுமையான இணையதளமாக இத்தகவல்தளம் இயங்கிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *