பொதுக் கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைந்து வழிபடக்கூடாது; அவர்கள் வழிபடுவதற்கென்றே தனிக் கோயில்கள் கட்டப்படவேண்டும் என்று காந்தியார் எழுதியதையும் பேசினதையும் கண்டித்து 1929 நவம்பர் 26 ஜஸ்டிஸ் ஆங்கில நாளேடு கட்டுரை எழுதியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
அட்டைப்படத்திலும், இங்கும் நீங்கள் காண்பவை தெருவோரத்தில் வாழ்வோர் பற்றிய ஒளிப்படங்கள் மட்டுமல்ல… அவற்றை எடுத்ததும் தெருவோரக் குழந்தைகள்தான்! வெள்ளிக்கரண்டியில் உண்பவர்களுக்குத் தான் திறமை என்பதல்ல…
வாய்ப்பும் பயிற்சியும் இருந்தால், அடித்தட்டு மக்களுக்கு இருக்கும் படைப்புத் திறன் எப்படி வெளிப்படும் என்பதற்கு இந்தப் படங்கள் சான்று! வேல்டுவிஷன் நிறுவனத்தின் முயற்சியில் ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் நடத்திய பயற்சிப் பட்டறையில் பயிற்றுவிக்கப்பட்ட குழந்தைகள் தங்கள் வாழ்விடங்களையும், வாழ்வியலையும் புகைப்படங்களாக எடுத்துள்ளனர்.
இப்படங்களின் கண்காட்சி சென்னையில் செப்டம்பர் 23, 24 ஆகிய இருநாட்கள் நடைபெற்றது. மேலே வானம், கீழே பூமி என்று வாழ்ந்து தங்கள் வாழ்க்கையை மறைக்க முடியாத, அப்பட்டமாகத் தெருவில் வாழும் குழந்தைகளுக்குள் எத்தகைய திறமை ஒளிந்திருக்கிறது பார்த்தீர்களா?