சிறையில் நடந்த பொதுக்கூட்டம்! ஆசிரியருக்கெல்லாம் ஆசிரியர் !- வி.சி.வில்வம்

ஆசிரியர் முனியாண்டி அவர்கள், 1942ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், நகரமங்கலம் எனும் கிராமத்தில் பிறந்தவர். 82 வயது நிறைந்தவர். பெற்றோர் மாரியம்மாள், கண்ணையன். பரமக்குடியில் இருந்து பஞ்சம் பிழைப்பதற்காகத் திருவாரூர் மாவட்டம் ஆமூர் பகுதிக்கு அம்மா அழைத்து வந்துள்ளார். அப்பா மலேசியாவில் பணியாற்றியவர். ஆமூர் பகுதி என்பது பார்ப்பனப் பண்ணையம் நிறைந்த ஊர். 15 வயதில் இயக்கத் தொடர்பு! அந்நிலையில் தான் இயக்கத் தொடர்பு கிடைத்துள்ளது. 15 வயது முதல் பெரியார் கூட்டங்களில் கழகப் […]

மேலும்....

காரைக்குடி அரங்கசாமி!- வி.சி.வில்வம்

உடல்நலம் சரியில்லாமல் இருந்த ஆசிரியர் ச.அரங்கசாமி அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம்! படுத்தப் படுக்கையாய் இருந்தார். பல செய்திகள் பேசிய நிலையில், இயக்கத்தில் அவருடைய செயல்பாடுகள் குறித்துப் பேச்சுக் கொடுத்தோம். சிறிது நேரத்தில் எழுந்து அமர்ந்து கொண்டார். பேசச் சிரமப்பட்டாலும், நினைவு தப்பாமல் பேசினார். நாம் சந்தித்த அன்றுதான் (மே 28) அவரது பிறந்த நாள்! ஒரு வாழ்த்தோடு பேச்சைத் தொடர்ந்தோம். முழுவதுமாகப் பேசி முடித்து, நாமும் திரும்பி வந்துவிட்டோம். இந்நிலையில் ஜூன் 24 அன்று அரங்கசாமி […]

மேலும்....

கருப்புச் சட்டை அணியாத தோழருக்கு ஒரு ரூபாய் தண்டனை! – நேர்காணல்

திராவிடர் கழகத்தின் உறுப்பினராக தாத்தா கருப்பன் அவர்கள், அப்பா முனியாண்டி அவர்கள், இப்போது சின்னத்துரை அவர்கள்! காலம் காலமாக இந்த இயக்கத்தில், குடும்பத்தோடு பணி செய்கிறார்களே, என்ன காரணம்? தனிப்பட்ட பயன்கள் எதுவும் இருக்கிறதா இல்லை பணம் எதுவும் கிடைக்கிறதா? மெழுகுவத்தியின் நிறம் கருப்பு ! எதுவுமில்லை! மாறாக நான்கு பேர் பாராட்டினால், அதே அளவு விமர்சனமும் செய்வார்கள். எதிராளிகளுக்கும் சேர்த்து, பாடுபடுவதே இந்த இயக்கத்தினர் பணி! மெழுகுவத்திகள் தன்னையே உருக்கிக் கொள்ளும்! இவர்கள் கருப்பு நிற […]

மேலும்....

சனவேலி முத்தழகு ! – வி.சி.வில்வம் 

இராமநாதபுரம், காரைக்குடி கழக மாவட்டம் சனவேலி முத்தழகு அவர்களுக்கு வயது 72 ஆகிறது. அதாவது 22 வயதில் தம் கிராமத்தில் நாத்திக வாழ்க்கையைத் தொடங்கியவர் 50 ஆண்டுகளாகச் சற்றும் பிசகாமல், குண்டூசி முனை போல நேர்குத்தி நிற்பவர்! அவ்வளவு நேர்மை! அவ்வளவு நேர்த்தி! அதே கிராமத்தைச் சேர்ந்த இரா.போஸ் அவர்கள் மூலம் இயக்கச் சிந்தனைக்கு வந்தவர். பகுத்தறிவாளர் கழகத்தைத் தந்தை பெரியார் 1970இல் சென்னையில் தொடங்கினார். 1971இல் இராமநாதபுரம் மாவட்டம், திருவெற்றியூர் கிராமத்தில் 25 தோழர்களுடன் இவர்கள் […]

மேலும்....

செக்கடிக்குப்பம் காத்தவராயன் ! – வி.சி.வில்வம்

திண்டிவனத்தில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடந்து கொண்டிருந்தது! வெளியில் நின்றவர்கள் திடீரென உள்ளே நுழைந்தார்கள், பேசிக் கொண்டிருந்தவர்கள் அமைதியானார்கள், தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவர்கள் நிமிர்ந்து பார்த்தார்கள். ஆம்! காத்தவராயன் பாடத் தொடங்கி இருந்தார். செக்கடிக்குப்பம் காத்தவராயன் என எல்லோராலும் அறியப்படுகிறார்! இன்றைய தலைமுறை இவரை அறியும் வாய்ப்புக் குறைவு. முதன்முதலில் நாமும் அவரைச் சந்திக்கிறோம்! பயிற்சி பட்டறையின் இடையிடையே இவர் பாடிய பாடல்கள் அதிரடி ரகம்! பயிற்சிக்கு வந்த புதிய மாணவர்களையும் ஈர்த்துவிட்டார்! இவ்வளவு இனிமையான குரலா? […]

மேலும்....