பெரியாரின் பெருந்தொண்டர் கலைஞர்!-முனைவர் கடவூர் மணிமாறன்

பெரியாரின் பெருந்தொண்டர்; உலகம் போற்றும் பேரறிஞர் அண்ணாவின் அருமைத் தம்பி! சரியாக அரசியலைத் தேர்ந்தே, பொல்லாச் சழக்கினரை மிகச்சாடி மாநி லத்தின் உரிமைக்குக் குரல்கொடுத்த தமிழ்ப்போ ராளி! உதவாத சாதிமத மடமைப் போக்கை விரிவாக எடுத்துரைத்தே குமுக நீதி வென்றிடவே பாடுபட்ட உழைப்புத் தேனீ! முத்தமிழைக் கற்றுணர்ந்த மு.க! நல்லார் முத்துவேலர் அஞ்சுகத்தாய் ஈன்ற ஏந்தல்! முத்தனைய சொற்கொண்டல்! வாழ்நாள் எல்லாம் முரசொலியில் எழுத்துவிதை ஊன்றி வந்த வித்தகராம்! அய்ந்துமுறை தமிழர் நாட்டில் வீறார்ந்த முதலமைச்சர் பொறுப்பை […]

மேலும்....

காடும் – கழனியும் ஏரும் – எருதும் காட்டிடும் பாடம் படிப்போம்!

பேரறிஞர் அண்ணாவின் பொங்கல் வாழ்த்து வாழ்த்துகின்றேன்! வாழ்த்துகின்றேன்! எத்துணை ஏழ்மை, ஏக்கம், துக்கம் ஈங்கிவை தாக்கிடினும், ஏற்புடைத் திருநாள் என்றுநாம் கொண்ட பொங்கற் புதுநாள் அன்று மட்டும் புதுப்புன லாடி புத்தாடை அணிந்து, பூரிப் புடனே விழாநடத் திடுவோம்! என்னையோ வெனில், உழைப்பின் உயர்வைப் போற்றிடும் பண்பு உலகெலாம் பரவிடல் வேண்டு மென்றே விழைவு மிகக் கொண்டோம் அதனால்! காய்கதிர்ச் செல்வனைப் போற்றினர், ஏனாம்? உயிர்கட்கு ஊட்டம் அளிப்பவ னதனால். உழவர்கள் உயர்வினைப் போற்றிடல் எதனால்? உண்டி […]

மேலும்....

வரலாற்று சுவடுகள் – புரட்சியும் மகிழ்ச்சியும்

பேரறிஞர் அண்ணா திருவாங்கூர் திவான் சர்.சி.பி. இராமசாமி அய்யர், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் வேதம், இந்து மதம், பார்ப்பனியம் ஆகியவற்றைக் கண்டித்துப் பேசியமைக்காக, பார்ப்பன இன உணர்வுடன் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தார். அவருடைய எதிர்ப்புக்கு திரு.எஸ். இராமநாதன் அவர்கள் ‘லிபரேட்டர்’ இதழில் மறுப்புக் கட்டுரை ஒன்றை எழுதினார். அதனடிப்படையில் அறிஞர் அண்ணா அவர்கள் திரு.எஸ். இராமநாதனைப் பாராட்டியும், சர்.சி.பி. இராமசாமி அய்யர் வகையறாக்களுக்கு சில வினாக்களை எழுப்பியும், தமிழர்கள் பார்ப்பனியத்தைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் […]

மேலும்....