சுயமரியாதை இயக்கம் தோன்றியது ஏன்? எப்படி? எப்போது?- கி.தளபதிராஜ்

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்க விழா தமிழ்நாடு முழுவதும் மிகுந்த எழுச்சியோடு நடந்து முடிந்திருக்கிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தலின்படி திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள் கொள்கை விளக்க நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டிருக்கின்றன. சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாள் முதலாய் திராவிட இயக்க ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைக்கின்றனர். அதற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் இருந்தபோதோ, அதிலிருந்து வெளியேறியபோதோ ‘சுயமரியாதை இயக்கம்’ என்பதாக ஒன்றைத் தொடங்க […]

மேலும்....

இமையம் கதைகளில் கரையும் இதயம்! -… கி.தளபதிராஜ் …

‘கோவேறு கழுதைகள்’ நாவல் மூலம் சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் இமையம் அவர்கள். சமூக அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனும் கொண்டாடும் மகத்தான ஓர் எழுத்தாளராக இயங்கிக் கொண்டிருப்பவர். அனுபவமும் புனைவுகளும் பிரித்துப் பார்க்க இயலாத அளவிற்கு ஒன்றோடொன்று கரைந்து போயிருக்கும் அவரது எழுத்துகள் எதார்த்த வாழ்வை அப்படியே கண்முன் நிறுத்தும் காந்த சக்தி படைத்தவை. ஒன்பது நாவல்கள், எட்டு சிறுகதைகளை குறைந்த கால இடைவெளியில் எழுதி வெளியிட்டிருக்கிறார். அவர் எழுதிய சிறுகதைகளில் ‘அணையும் நெருப்பு’, ‘அய்யா’, […]

மேலும்....

சுயமரியாதைக் காற்று சூறாவளியாய் சுழன்றடிக்கட்டும் ! – கி. தளபதிராஜ்

காங்கிரஸ் நேரடியாகத் தேர்தலில் பங்கேற்காத காலம். சமூகச் சீர்திருத்தம், ஜாதி – தீண்டாமை ஒழிப்பு, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் போன்ற கொள்கைகளில் காங்கிரஸ் உறுதியாக இருக்கும் என நினைத்து, 1919ஆம் ஆண்டில் ஈரோட்டில் தான் வகித்த நகர மன்றத் தலைவர் உட்பட பல பதவிகளையும் உதறித் தள்ளிவிட்டு காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார் பெரியார். காங்கிரஸ் – சுயமரியாதை இயக்கம் – நீதிக்கட்சி – திராவிடர் கழகம் என எந்த நிலையிலும் அவரது முதன்மையான கொள்கை – குறிக்கோள் […]

மேலும்....

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை : சமூக நீதி பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை ! – கி. தளபதிராஜ்

நடைபெற இருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, இந்தியா கூட்டணிக்குத் தலைமையேற்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது. 1947க்குப் பிறகு எத்தனையோ தேர்தல்களை இந்திய ஒன்றியம் சந்தித்திருந்தாலும், இந்தத் தேர்தல் இன்னொரு சுதந்திரப் போராட்டம் என்று சொல்லப்படுகிற அளவிற்கு சரித்திர முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாட்டை ஆளும் பா.ஜ.க., ஜனநாயகத்தை முற்றிலுமாக அழித்து ஒழித்து ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டது. காலம் காலமாய்ப் போராடிப் பெற்ற சமூக நீதியை சவக்குழிக்கு […]

மேலும்....

இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டமும் ‘இந்தியா’ கூட்டணியும்! – கி.தளபதிராஜ்

இந்திய ஒன்றியத்தை ஆண்டுகொண்டிருக்கும் பா.ஜ.க. அரசு கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தது. மசோதா கொண்டுவரப்பட்ட போதே பலதரப் பட்டவர்களின் கடுமையான கண்டனத்தை எதிர் கொண்டது. கட்சி வேறுபாடுகளைத் தாண்டி பல்வேறு தலைவர்கள், அறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், சமூகவியலாளர்கள் என ஓங்கிக் குரல் கொடுத்தவர்களின் பட்டியல் மிக நீண்டது. இந்திய அளவில் மட்டுமல்லாது பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த நிலையில் மசோதா சில ஆண்டுகள் […]

மேலும்....