பெரியார் மீது ஏன் இவ்வளவு வன்மம்!

பெரியாரை விதவிதமாக வரைகிறார்கள்; எவ்வளவு கோணல் புத்தியுடன் முடியுமோ, அவ்வளவு வரைகிறார்கள். ஆக பெரியார் நினைப்பாகவே இருக்கிறார்கள்! சென்ற மாதம் அவரைப் பன்றியாக வரைந்தார்கள், பின்னர் பன்றி மேய்ப்பவராக வரைந்தார்கள். எப்படியாவது கேவலப்படுத்திவிட நினைக்கிறார்கள். பெரியாரின் கருத்திற்குப் பதில் சொல்லி, அவரை யாரும் வெல்லலாம்! ஆனால், அது அறிவு சார்ந்த விசயம். முதலில் அவரைப் படிக்க வேண்டும்; பின்னர் அதை மறுக்க வேறு நூல்கள் படிக்க வேண்டும்; பிறகு இரண்டையும் சிந்திக்க வேண்டும்… இதெல்லாம் நடக்கிற காரியமா? […]

மேலும்....

திராவிடர் இயக்கமும் பிரச்சார உத்திகளும்!

– வி.சி.வில்வம் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை” வகுப்புகள் ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில், திருச்சி, கே.கே.நகரில் அமைந்துள்ள பெரியார் கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்றன . எத்தனை வடிவங்கள்! திராவிடர் இயக்கங்கள் தான், இந்த மக்களுக்குத் தேவையான உயிர் மூச்சுக் கொள்கைகளை எத்தனை, எத்தனை வடிவங்களில் நடத்துகிறது! நூறு ஆண்டுகளைக் கடந்த இந்த இயக்கம் பொதுக் கூட்டம், தெருமுனைக் கூட்டம், மாநாடு, கருத்தரங்கம், பட்டிமன்றம், நாடகம், பாடல், […]

மேலும்....

காட்டுமிராண்டி மொழி என்றவர்தான் கணினி மொழியாக்கினார்!

– வி.சி.வில்வம் “தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று சொல்லிவிட்டார்”, எனப் பல ஆண்டுகளாய் குதிக்கிறார்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள். சமஸ்கிருதமே உயர்ந்தது என்கிறது ஒரு கூட்டம். அதற்கு இவர்கள் பதில் சொல்வதில்லை. தமிழை நீஷ பாஷை (இழிந்த மொழி) என்கிறது அக்கிரஹாரம். அதற்கும் இவர்கள் பதில் சொல்வதில்லை; உணர்ச்சியற்றுக் கிடக்கிறார்கள்! ஆனால், வளர்ச்சிப் பார்வையில், ஆய்வு நோக்கில் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார் பெரியார்! உடனே குதிக்கிறார்கள். பெரியார் எப்படிச் சொல்லலாம் என 50 ஆண்டுகளாய்க் கதறுகிறார்கள். […]

மேலும்....

சமூகநீதித் தளத்தில் நமக்கான நூலகம் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் !

உலகத் தமிழர்கள் பார்வையில்! திராவிடத்தால் வீழ்ந்தோம்,” என்பார்கள் சிலர். உலகம் முழுவதும் மருத்துவம், தொழில் நுட்பம், கணினித் துறை என ஏராளமான பொறுப்புகளில் தமிழர்கள் கோலோச்சி வருகிறார்கள். பிலால் அலியார் அந்தளவு உயரம் போக, அந்தளவுக் கல்வி முக்கியம் என்பது அடிப்படை அறிவு. திராவிட அரசுகள் செய்த கல்விக்கான அத்தனை உதவிகளையும் பெற்று சிறுக, சிறுக மேலேறி, இன்று விண்ணைத் தொடும் விமானத்தில் பறக்கிறார்கள் என்றால் யார் காரணம்? திராவிடம் தானே காரணம்! ஜாதி, மதம், போலித் […]

மேலும்....

பெயரைக் கேட்டாலே அலறுகிறார்கள்!

வி.சி.வில்வம் பெரியார் என்றதும் நினைவிற்கு வருவது அவரது கொள்கைகளே! எப்படியான கொள்கைகளை அவர் உருவாக்கினார் என்றால், இறந்து 50 ஆண்டுகள் ஆன பிறகும் அவரை ஒரு சாரார் கடுமையாகத் திட்டும் அளவிற்குக் கொள்கைகளை உருவாக்கினார்! உலகில் எத்தனையோ பேர், எவ்வளவோ தத்துவங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அவை நடைமுறையில் இருக்கலாம், இல்லாமல் போகலாம். ஆனால், அந்தத் தத்துவங்களை உருவாக்கியவர்களை இறந்த பிறகு யாரும் திட்டுவது கிடையாது. சில ஆண்டுகளில் அந்த மனிதரையே மறந்துவிடுவார்கள். இதுதான் உலக வழக்கமாக இருக்கிறது! […]

மேலும்....