நலம் சேர்த்த உயர் தலைவா..!

முனைவர். கடவூர் மணிமாறன் முத்தமிழைக் கற்றுணர்ந்த அறிஞர்; பொன்றா முத்துவேலர் அஞ்சுகத்தாய் ஈன்ற செல்வர்! ஒத்துணர்வால் ஒப்புரவால் உலகம் போற்றும் உயரியநம் தமிழினத்தின் தலைவர் ஆனார்! கத்துகடல் சூழுலகில் எங்கும் வாழும் கவின்தமிழர் நெஞ்சமெலாம் நிறைந்து வாழ்வில் முத்திரையைப் பதித்தவரோ மொய்ம்பு சோன்ற முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆனார்! நூற்றாண்டு விழாவைக்கொண் டாடு கின்றோம்! நுவலரிய அருவினைகள் பலவும் நாளும் ஆற்றியவர்; அண்ணாவின் தலைமை ஏற்ற அடுக்குமொழிப் பேச்சாளர்; பெரியார் தம்மைப் போற்றியவர்; அவர்நினைத்த யாவும் ஆட்சிப் […]

மேலும்....

கவிதை – அயோத்திதாச பண்டிதர்!

முனைவர். கடவூர் மணிமாறன் சாதி எதிர்ப்பின் முதற்போ ராளி நீதியை விழைந்த நேரிய தொண்டர்! அறிஞர் அயோத்தி தாச பண்டிதர் குறிக்கோள் வாழ்வினர் கொள்கை மறவர்; சீர்மிகு திராவிட இயக்கம் முகிழ்த்திட வேர்எனத் திகழ்ந்த வெந்திறல் அரிமா! தமிழகம் என்றும் தலைநிமிர்ந் தெழவே ‘தமிழன்’ “திராவிடன்” எனுமிரு அரசியல் அடையா ளத்தைக் கொடையாய் அளித்தவர் படைமறம் ஏந்திய பான்மை மிக்கவர்; தமிழ்வர லாற்றைத் தகவுற எழுதிய அமிழா நெடும்புகழ் அறிஞர் இவரோ ஒருகா சுக்கும் மதிப்பிலாத் தமிழன் […]

மேலும்....

உழைப்போரை வாழ்த்துவோம்! – முனைவர். கடவூர் மணிமாறன்

உலகெங்கும் வாழ்கின்ற தொழிலா ளர்கள் உவகையுடன் கொண்டாடும் திருநாள் ‘மே’ நாள்! பலர்வாழச் சிலர்வாடி வதங்கி நாளும் பன்னரிய துயரெய்தி உழைக்கின் றார்கள்! நலம்சேர்க்கும் அவர்களது வாழ்வில் எந்த நன்மைகளும் விளையாமல் இருத்தல் நன்றோ? உலகுயர உழையானைக் கொடிய நோயன் ஊர்திருடி என்றார்பா வேந்தர் அந்நாள்! எல்லாமும் உருவாக்கி மக்கள் எல்லாம் இன்புறவே செய்வோர்யார்? தங்கள் வாழ்வில் சொல்லவொணாத் தீவறுமை சூழ்ந்த போதும் சுறுசுறுப்பாய் பரபரப்பாய் இயங்கி நாட்டில் நல்லனவே நாடுகின்ற நாட்டம் மிக்கோர் நாம்மதிக்கும் உழைப்பாளர் […]

மேலும்....

கவிதை – நெஞ்சில் வெறுப்பை விதைப்பவர்!

முனைவர் கடவூர் மணிமாறன்   மக்கள் ஆட்சியின் மாண்பெலாம் தொலைத்தே மனம்போன போக்கில் நடக்கிறார் – ஒருவர் மதிப்புப் போனதும் துடிக்கிறார்! சிக்கல் நாற்புறம் சேர்ந்துமே வளைத்திடச் செய்வ தறியாது தவிக்கிறார் – பொல்லாச் சினத்துடன் ஆட்சிகள் கவிழ்க்கிறார்! சொன்னதை எல்லாம் காற்றில் விடுகிற சூத்திரம் நன்றாய்க் கற்றவர் – நல்லோர் சொற்களை நடுத்தெரு விற்றவர்! மன்னரைப் போலவே மகுடம் தொடரவே மந்திரப் புன்னகை செய்கிறார்! – ஏழை மக்களோ வரிகளால் நைகிறார்! மூடரின் கைகளில் முடமெனச் […]

மேலும்....

கவிதை – பொறுத்துக் கொள்வோம்!

முனைவர் கடவூர் மணிமாறன் இடக்கினைச் செய்வோர் நாட்டின் ஏற்றமோ நாடார்! இந்நாள் வடக்கரோ இந்தீ தன்னை வலிந்துமே திணிக்கும் நோக்கில் முடக்கிடும் கல்விக் கொள்கை முனைப்புடன் கொணர உள்ளார்; நடப்பினை அறியார் கொல்லும் நஞ்செனத் திரிகின் றாரே! நாடுமே ஒன்றாம்; நாவில் நவின்றிடும் மொழியும் ஒன்றாம் பீடுற வாழ எண்ணார் பேதைமை வயப்பட் டோரோ மாடென அலைய லானார் மாண்பினை உதறித் தள்ளிக் கேடெலாம் இழைப்பர்; இந்தக் கீழ்மையைப் பொறுத்துக் கொள்ளோம்! சமத்துவம் விரும்பார்; மூடச் சழக்கினைத் […]

மேலும்....