உங்களுக்குத் தெரியுமா?

நீதிக்கட்சித் தலைவர் சர்.பிட்டி தியாகராயர் அவர்கள் சென்னை மாநகர முதல் மேயராகத் தேர்ந்தெடுக் கப்பட்ட காலகட்டத்தில்தான் சென்னை மாநகரில் கட்டாய ஆரம்பக் கல்வியும், பார்வையற்றோர் பள்ளியும் பிச்சைக்கார மறுவாழ்வு இல்லமும் உருவாக்கப்பட்டன என்ற வரலாற்றுச் செய்திகள் உங்களுக்குத் தெரியுமா?    

மேலும்....

சர்.பிட்டி தியாகராயர்

தன்னுணர்விற்கு வழிகோலியவர் “சர்.பிட்டி தியாகராயர் தோன்றி திராவிடப் பெருங்குடி மக்களுக்குத் தலைமை பூண்டு அவர்களின் தன்னுணர்விற்கு வழிகோலி, அவர்களின் வாழ்வில் இருந்து வந்த அடிமைத்தனத்தை அகற்றப் பாடுபட்டு சமுதாயத்துறை, பொருளாதாரத் துறை அரசியல் துறை ஆகியவற்றில் நல்லிடம் பெற்றிட உழைத்தார். நமது பண்டைய பெருமைகளையும் அவரால் உணரமுடிந்தது. அன்று தியாகராயர் திராவிடப் பெருங்குடி மக்கள் முன்னேற வேண்டுமென்று பாடுபட்டதின் பலனை இன்று காண்கிறோம். – பேரறிஞர் அண்ணா

மேலும்....