கவிதை: தொண்ணூறிலும் தொடரும் தொண்டு!
பேராசிரியர் அ. செகதீசன், ஆரியூர் விடுதலையைக் கண்டாலே கடமை உணர்வேறும்! விடுதலையைக் கைப்பிடித்தால் இனமானம் தோன்றும்! விடுதலையைப் படித்தாலோ வரும்பாது காப்பாய் வீறுகொளக் கூடும்! தன் மானமிகும்! சாதி விடுதலைக்கும் வீண்மதத்தின் விடுதலைக்கும், நாட்டு விடுதலைக்கே முன்னாகும் சமுகவிடு தலைக்கே விடுதலையைத் தோற்றுவித்த தந்தை பெரியாரின் ‘விடுதலை’யின் ஆசிரியர் ‘உண்மை’யுடன் வந்தார். தந்தைபெரி யார்இன்றேல் தமிழினமே ஏது?! தன்மான இயக்கம் எனத் தாங்கியதன் மீது விந்தைமிகு மாற்றமெலாம் விரைந்தெடுத்த போது வீரமணி ஆசிரியர் விடுதலையின் பேறு! சந்தையென […]
மேலும்....