தொல்லியல் அறிஞர் சர் ஜான் மார்ஷலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி!

மிகச் சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 20 செப்டம்பர் 1924 அன்று சர் ஜான் மார்ஷல் அவர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை என்றென்றைக்குமாக மாற்றி வடிவமைத்தார். ஜான் மார்ஷல் அவர்களது பங்களிப்பை நன்றிப்பெருக்குடன் பின்னோக்கி அவருக்கு இந்நாளில் நன்றி கூறுகிறேன். சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் சரியான தீர்மானத்துடன் அதனை அவர் திராவிட இனத்துடன் தொடர்புபடுத்தினார். வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டினை ஒரு பன்னாட்டுக் கருத்தரங்குடனும், சர்ஜான் மார்ஷல் அவர்களின் […]

மேலும்....

வரலாற்றுத் திரிபுகளை முறியடித்து உண்மை வரலாற்றை உலகிற்குக் காட்டுவோம்!- மஞ்சை வசந்தன்

இந்திய வரலாற்றை வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களோடு மட்டும் தொடர்புபடுத்திக் காலவரையறை செய்யப்பட்டு வந்த காலக்கட்டத்தில், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு அதற்கும் முந்தையது. அது நகர நாகரிக வரலாறு, அறிவியல் சார்ந்த, வணிகம் சார்ந்த, மக்களை முன்னிறுத்திய வரலாறு என்று அனைவருக்கும் அறிவித்த பெருமை இந்தியத் தொல்லியல் துறையின் தலைவராகப் பணியாற்றிய ஜான் மார்ஷலையேச் சேரும். ஜான் மார்ஷல் “சிந்து, பஞ்சாப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள், முதிர்ந்த பண்பாட்டோடு, அருமையாகக் கட்டியெழுப்பிய நகரங்களில் உயர்தரமான கலை, கைவினைத் திறன்களோடும், […]

மேலும்....

மத மூடநம்பிக்கைகளை மாணவர்கள் மீது திணிப்பது மாபெரும் குற்றம்!- மஞ்சை வசந்தன்

மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் கல்வியானாலும், செய்திகள் ஆனாலும், செயல்முறைகள் ஆனாலும் அவை அறிவுக்கு (அறிவியலுக்கு) ஏற்புடையதாக இருக்க வேண்டும். அறிவுக்கு ஒவ்வாத எதுவும் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படக் கூடாது. அறிவுக்கு உகந்தது எது? சிலர் வினா எழுப்புகின்றனர். உறுதி செய்யப்படக்கூடியவை (நிரூபிக்கப்பட்டவை) மட்டுமே அறிவுக்கு உகந்தவை. நமது நம்பிக்கைகள் எல்லாம் அறிவியல் அல்ல. ‘காந்தம் இரும்பைக் கவரும்’, ’தீ சுடும்’, ‘மின்சாரம் தாக்கும்’ இதுபோன்ற கருத்துகள் உறுதி செய்யப்பட்டவை. “கடவுள் நம்மைப் படைத்தார்; நம் வாழ்வு எப்படி இருக்கும் என்பதை […]

மேலும்....

10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில்…

கோயில் கருவறைகள் வரைக்கும் பாலியல் வன்கொடுமைகள் நடந்ததை உ.பி., காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் பார்த்துவிட்டோம். அந்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாக மதத்தின் பேரால் பேரணி சென்ற கொடூரர்களையும் இந்த நாடு சாட்சியாக நின்று பார்த்துக் கொண்டிருந்தது. மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் பஞ்சாயத்துகளின் பெயரால் பெண்களுக்கு எதிராக அன்றாடம் நிகழும் கொடுமைகள்… இன்னும் நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகின்றன.

மேலும்....

பெண்கள் என்ன நுகர்வுப் பண்டமா ? – மஞ்சை வசந்தன்

நாளேடுகளைப் புரட்டினால், தொலைக்காட்சிகளை நோக்கினால், சமூக ஊடகங்களைப் பார்த்தால் ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தரும் பாலியல் வன்கொடுமைகள் பற்றிய செய்திகள் அணிவகுத்து வருகின்றன. அவை யாவும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான வல்லுறவுகளாகவே உள்ளன. 2 வயதுச் சிறுமி முதல் இந்த வல்லுறவு நிகழ்த்தப்படுகிறது. 15 வயது பையன் முதல் 80 வயது முதியவர் வரை இந்தக் கொடிய குற்றத்தைச் செய்கின்றனர். குடும்பத்து உறுப்பினர்கள்கூட இக்கொடிய செயலைச் செய்கிறார்கள் என்பது எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தை உருவாக்குகிறது. பள்ளி ஆசிரியர், […]

மேலும்....