Mrs. செங்கிஸ்கானும் Mrs.ராமனும் சந்தித்தால்…?-திருப்பத்தூர் ம.கவிதா

“அதை ஏன் கேக்குற? அது பெரிய ராமாயணக் கதை…” “எங்காவது போய் என் வனவாசத்தைத் தொலைச்சிட்டு வரேன்..‌.” இந்த உரையாடல்கள் எல்லாம் அறிந்தும் அறியாத என் பிள்ளைப் பருவத்தில் எங்கள் கிராமங்களில் எல்லா மக்களிடமும் இயல்பாகப் புழங்கும் சொற்களாக என் காது படக் கேட்டவை. ஒரு கதை என்பது சமூகத்தில் இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதால் தான் எந்தக் கலை வடிவமும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி சமுதாயத்தின் மீது எத்தகைய சிந்தனைகளைத் தூண்டி அதன் போக்கை […]

மேலும்....

கொண்டாட்டங்களின் அரசியல்- குமரன் தாஸ்

விலங்குகளிடமிருந்து மனிதர்களை வேறுபடுத்தும் விசயங்கள் எத்தனையோ இருந்தாலும் மிக முதன்மையானதாகப் ‘பண்பாடு’ என்பதும் உள்ளது. ஆம், மனிதர்கள் விலங்குகளைப்போல உடலால் மட்டுமல்ல, முதன்மையாக மனதால் வாழ்பவர்கள். எந்த ஒரு விலங்கும் தனது மனமகிழ்வுக்காக தனது உடலைத் தானாக வருத்திக் கொள்வதில்லை. விலங்குகள் இன்றளவும் அவற்றின் உடல் தேவைகளால் உந்தப்பட்டே அனைத்துக் காரியங்களிலும் ஈடுபடுகின்றன. அதனால் ஏற்படும் விளைவுகளையும் சந்திக்கின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் தாங்களே உருவாக்கிக் கொண்ட கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்ற […]

மேலும்....

சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்!

வரலாற்றில் புகழோடு வாழு கின்ற வல்லவராம் நல்லவராம் வி.பி.சிங்கோ அரசரது குடும்பத்தில் பிறந்த போதும் அன்பாலும் பண்பாலும் உயர்ந்து நின்றார்! உரத்தநறுஞ் சிந்தனையால் சமூக நீதி உயிர்காக்கும் மாண்பினராய் உலகே போற்றும் அரசியலில் திருப்புமுனை நல்கி நாட்டின் ஆட்சியில்ஏ ழாம்தலைமை அமைச்சர் ஆனார்! தலைமைக்கோர் சரியான எடுத்துக் காட்டாய்த் தாம்திகழ்ந்து மக்களது மதிப்பைப் பெற்றார்! விலைபோகும் இழிந்தோரை விலைக்கு வாங்கும் வெறிகொண்டே அலையாமல் எல்லா ருக்கும் நிலையாகப் பயன்யாவும் நிறைவாய்க் கிட்ட நெகிழ்வுறவே நாட்டோரின் நெஞ்சில் நின்றார்! […]

மேலும்....

ஜாதி, மதப் போதை ஒழிப்பு நாள்…- முனைவர் வா.நேரு

ஜூன் 26 என்பது “உலகப் போதை ஒழிப்பு தினம்” மற்றும் “சட்டவிரோதக் கடத்தல் தடுப்புத் தினம்” ஆகும். போதைக்குள் மாட்டிக்கொண்ட மனிதர்களால், அவர்களின் குடும்பம் படும்பாடு சொல்லி மாளாது. இந்தக் கடத்தலைச் செய்பவர்களும் மனிதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள்தாம். உழைக்கும் கூட்டம் ஒரு பக்கம் இருப்பதைப் போலவே உழைக்காமல் உண்ண வேண்டும் என்று எண்ணுகிற ஒரு கூட்டமும் இந்த உலகத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.அந்த மனச்சாட்சி அற்ற கூட்டம்தான் பெண்களையும் குழந்தைகளையும் கடத்துகிறது. போதைப்பொருளை உட்கொள்ளும்போது உட்கொள்ளும் […]

மேலும்....

களத்தில் வென்றோம் ; போர் தொடரும் ! -வழக்குரைஞர் சே .மெ . மதிவதனி

சர்வாதிகாரம் தனது எல்லைக்குச் சென்று மக்களைத் துன்பப்படுத்தும்போது, மக்களின் விழிப்புணர்வால் ஜனநாயகம் உயிர்பெற்று சர்வாதிகாரத்தை வீழ்த்தும். உலகம் முழுவதும், சர்வாதிகாரம் வீழ்ந்த வரலாற்றுப் பாதையை சற்றுக் கூர்ந்து கவனித்தால் அங்கே, மக்கள் ஜனநாயகம் தோன்றியதன் சுவடுகள் தெரியும். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எல்லா நேரங்களிலும் கொடுங்கோன்மை என்பது, ஆயுதம் தாங்கி மக்களை அடக்குவதாக மட்டுமே இருப்பது இல்லை. சில நேரங்களில் அதன் வடிவம் மாறும். கடந்த பத்தாண்டுகளில் அப்படி மாறுபட்ட வடிவத்தில் சர்வாதிகார, கொடுங்கோன்மை ஆட்சியைத்தான் […]

மேலும்....