தலை நிமிர்வோம் இரா. அழகர்

‘டேய்! புல்லட் வாத்தியார் வந்துட்டு இருக்காரு. எல்லாரும் அமைதியா இருங்க; இல்லேன்னா வெளுத்துப்புடுவாரு” – வகுப்பறையில் தினேஷ் குரலில் அறையே அமைதி ஆனது. ஏறக்குறைய மூன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் வரை அந்தப் பள்ளியில் கண்டு பயப்படும் ஒரே ஆசிரியர் புல்லட் வாத்தி என்று மாணவர்களால் பெயர் சூட்டப்பட்ட நடேசன் வாத்தியாராகத்தான் இருப்பார். முறுக்கு மீசையுடன் புல்லட்டில் அவர் மிடுக்காக, கம்பீரமாக வரும் தோரணையே மாணவர்களை மிரளச் செய்யும். பாடம் நடத்துவதோடு நின்று […]

மேலும்....

சிறுகதை

“என்னடா பிரபு, என்ன தீவிரமா படிச்சிகிட்டு இருக்க? என்ன புத்தகம்? புதுசா இருக்கே,” மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்த தனது நண்பன் பிரபுவைப் பார்த்துக் கேட்டான் தற்செயலாக அங்கு வந்த சேரன். “என்னோட உறவுக்காரர் ஒருவர் புதியதாக ஒரு மாத இதழ் தொடங்கியுள்ளார். அதன் முதல் இதழ்தான் இது”, என்று பதில் சொன்னான் பிரபு. “அப்படியா! புத்தகத்தின் பெயர் என்ன?” என்று கேட்டபடியே அவன் அருகில் உட்கார்ந்தான் சேரன். “டெம்பிள் விசிட்” என்று பெயர் […]

மேலும்....

இரவல் இதயம் -இரா. அழகர்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கந்தசாமி ஏறக்குறைய ஒரு வாரம் கழித்து இன்றுதான் கண் விழித்தார். வீட்டின் குளியலறையில் இருந்தபோது திடீரென்று ஏற்பட்ட தலைசுற்றலும் மயக்கமும் என்ன ஏதோ என்று சுதாரிப்பதற்குள் ஆளை கீழே கிடத்திவிட்டது. அன்று கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தது இன்றுதான் கண் விழித்தார். தலைமாட்டில் அமர்ந்திருந்த மனைவி சுப்புலட்சுமி கணவன் கண் விழிப்பதைக் கண்டு… ”ஏதும் வேண்டுமா…? நர்ஸை வரச் சொல்லட்டுமா” எனக் கேட்க, வேண்டாம் என்று தலையசைத்து பார்வையை நாலாபக்கமும் சுழலவிடத் தொடங்கினார். அந்த […]

மேலும்....

பாதை – ஆறு. கலைச்செல்வன்

மாதவா, என்ன ஏதோ தீவிரமான சிந்தனையில் இருக்க போலிருக்கே”, என்று கேட்டுக்கொண்டே நண்பன் மாதவன் வீட்டுக்கு வந்தான் தமிழ்ப்பிரியன். “வா தமிழ்ப்பிரியன், நீ சொல்றது உண்மைதான். நான் அடுத்த வாரம் மதுரைக்குப் போக வேண்டும். எந்தப் பாதை வழியாகப் போகலாம்னுதான் யோசனை பண்றேன். பல நேரங்களில் நான் தவறாக முடிவெடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்கிறேன்” என்றான் மாதவன். “இதில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் நீ சரியான முடிவினை எடுப்பதில்லை. நான் சொல்லும் யோசனையையும் கேட்பதில்லை. சரி, இப்ப உனக்கு நான் […]

மேலும்....

ஏமாறாதே..! – கரசங்கால் கோ.நாத்திகன்

அனந்தராம அய்யர் சொந்த ஊர் கேரளா. திருச்சி இரயில்வே கோட்டத்தில் சீனியர் சிக்னல் இன்ஸ்பெக்டர் ஆக வேலை பார்த்து வந்தார்.பணியின் நிமித்தமாக சென்னைக்கு மாற்றப்பட்டார். தாம்பரம் புறநகர் கிராமப் பகுதியில் ஒரு சிறிய வீட்டை விலைக்கு வாங்கிக் குடியேறினார். அனந்தராம அய்யருக்கு ஏழு பிள்ளைகள்; அய்யரின் துணைவியார் ஏழு பிள்ளைகளைப் பெற்றதன் விளைவு எழுந்துகூட நடக்க முடியாத நிலை. அனந்தராம அய்யர் ஒரு தீவிர அய்யப்பன் பக்தர். ஒவ்வொரு ஆண்டும் அய்யப்பன் கோவிலுக்குச் செல்வதை அவ்வூரில் ஒரு […]

மேலும்....