வெளிச்சம்… ஆறு. கலைச்செல்வன் …

“தாத்தா, நான் மாநில அளவில் நடைபெற இருக்கும் கபடி போட்டியில் கலந்துகொள்ள அடுத்த மாதம் சென்னை போகிறேன்.” கட்டிலில் படுத்திருந்த செல்வம் மெதுவாகத் தலையைத் திருப்பி குரல் வந்த திசையைப் பார்த்தார். கதவருகே அவரின் பெயர்த்தி இதழ்யா புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தாள். “என்னம்மா சொன்னே, சரியா கேட்கல. திரும்பவும் சொல்லு” என்றார். “மாநில அளவில் கபடி போட்டி சென்னையில் அடுத்த மாதம் நடக்க இருக்கு. நான் அதில் கலந்துகொள்ளப் போகிறேன்” என்று சொல்ல வந்த செய்தியை மீண்டும் சொன்னாள் […]

மேலும்....

ராஜத்தின் திருமணம் – ஏ.வி.பி.ஆசைத்தம்பி

காலம் கெட்டுப் போய்விட்டதாகவே ஓலமிடுகிறார்கள். கலி வந்து விட்டானாம்! அதனால்தான் எல்லாம் தலை கீழாக நடக்கிறதாம்! பழையகால பத்தாம் பசலிகள் சமயம் கிடைத்த போதெல்லாம் யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் இதைப் போல் சொல்லத் தவறுவதில்லை. சாஸ்திரங்களையும் பழைய சம்பிரதாயங்களையும் யாரும் மதிப்பதில்லையே என்று சாம்பசிவ அய்யருக்கு மிகவும் வருத்தம். சாஸ்திரிய சம்பிரதாயம் மறுபடியும் ஜனங்களிடையே பரவ, சில சங்கங்களைக்கூட அய்யர் ஸ்தாபித்தார். இந்தக் காலத்திலே இந்தச் சங்கங்களை யார் மதிப்பார்கள்? அய்யரின் பேச்சைக் கேட்க ஆட்களே இல்லை! […]

மேலும்....

செவ்வாய் – ஆறு. கலைச்செல்வன்

“நாள்தோறும் இரவு நேரத்தில் வானத்தையே உற்று நோக்கிகிட்டு இருக்கியே. என்னதான் பார்க்கிறாய்? எனக்கும் கொஞ்சம் காட்டேன்,” மாதவன் அருகில் வந்து கேட்டான் அவன் நண்பன் பாபு. “வா பாபு”, என்று இரவுப் பொழுதில் தன் வீட்டுக்கு வந்த பாபுவை வரவேற்றான் மாதவன். அப்போது அவன் தன் வீட்டு மாடியில் நின்றுகொண்டு வானத்தையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான். மாடியில் ஒரு தொலைநோக்கியையும் அமைத்திருந்தான். அதன் வழியாகவும் வானில் ஒளிரும் கோள்களையும், நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டிருந்தான். “நீயும் வானத்தைப் பாரேன். எவ்வளவு […]

மேலும்....

தேர்வும் நேர்வும் – கரசங்கால் கோ. நாத்திகன்

மீனாட்சி சுட்டியான பெண். அப்பா சரவணன்; ‘அம்மா லட்சுமி; காமாட்சி பாட்டி. சென்னை புறநகரில் வசிக்கும் சிறு குடும்பம். காமாட்சி அம்மா ஆன்மிகத்தில் ஆழ்ந்த பற்று உடையவர். சரவணனுக்குச் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள ஒரு சிற்றூர். சரவணனுக்குச் சொந்தமாக 4 ஏக்கர் நன்செய் நிலமும் ஒரு தளம் போட்ட ஆயிரம் சதுர அடி மாடி வீடும் ஊரில் இருந்தும், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் அய்ம்பது ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் மேனேஜர் வேலை கிடைத்ததால் […]

மேலும்....

பக்தி மாயை – ஆறு. கலைச்செல்வன்

“முப்போகம் விளையும் நிலங்களையெல்லாம் அழித்துவிட்டு தொழிற்சாலை கட்டுவதா? கூடவே கூடாது. இதை ஒரு போதும் நாம் அனுமதிக்க மாட்டோம். மக்களே! இது நம் மண். இதை நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது. அரசு கட்ட நினைக்கும் தொழிற்பேட்டையை நாம் அனுமதித்தால் இந்த சுற்று வட்டாரத்தில் எங்குமே குடியிருக்க முடியாது. அதிலிருந்து வெளியேறும் வாயு நம் நுரையீரலைப் பாதித்து சுவாசக் கோளாறுகளை உண்டு பண்ணும். பூமி கெட்டு நிலத்தடி நீர் மாசுபடும். இதனால் நஞ்சு கலந்த நீரை நாம் குடிக்க […]

மேலும்....