சிந்தனைக் களம் ; புத்த, சமணப் பள்ளிகளே இந்துக் கோயில்கள் என்பதையும் வழக்காடலாமா?

சரவண இராசேந்திரன் வாரணாசியில் உள்ள ஞானவாபி பள்ளிவாசலின் சுற்றுச் சுவரில் இந்துக் கடவுளின் உருவம் தெரிகிறது; எனவே, அதை வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று டில்லியைச் சேர்ந்த சில பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுக்-கிறார்கள். இந்த வழக்கை நீதி மன்றம் முதல் பார்வையிலேயே தள்ளுபடி செய்திருக்க வேண்டும். ஏனென்றால் 1991இல் நிறைவேற்றப்-பட்ட வழிபாட்டுத் தலங்கள் குறித்த சட்டம் 15 ஆகஸ்ட் 1947 அன்று வழிபாட்டுத் தலங்கள் எந்த மதத்தின் வழிபாட்டுத் தலமாக இருக்கிறதோ […]

மேலும்....

நேர்காணல் : கலைஞர் பதில்கள்!

கேள்வி :- தந்தை பெரியார் கொள்கை யின்பால் தாங்கள் ஈர்க்கப்பட்டதற்குக் காரணமான முக்கிய நிகழ்ச்சி எது? கலைஞர் :- நான் திருவாரூர் உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, ‘பனகல் அரசர்’ என்ற தலைப்புள்ள புத்தகம் துணைப்பாடக் கட்டுரையாக எங்களுக்கு வைக்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ 50 பக்கங்கள் இருக்கும். வகுப்பிலேயே நான் ஒருவன் தான் அந்தச் சிறு நூல் முழுவதையும் அப்படியே மனப்பாடம் செய்து சொல்வேன். அந்தப் ‘பனகல் அரசர்’ என்ற புத்தகம்தான் எனக்கு அரசியல் அரிச்சுவடியாகவும், […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : இந்தித் திணிப்பை தமிழரின் வேலைப் பறிப்பை இனியும் அனுமதியோம்!

மஞ்சை வசந்தன் தமிழர் வேலைவாய்ப்புப் பறிப்பும், இந்தித் திணிப்பும் மத்திய அரசு தொடர்ந்து செய்துவரும் செயல் என்றாலும், பாஜக.வின் கடந்த எட்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில், இவை ஆர்.எஸ்.எஸ். அஜண்டாபடி செயல் திட்டமாகவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, முன் எப்போதையும்விட விழிப்-போடும், எழுச்சியோடும் இச்சதியை தமிழர்கள் முறியடித்தாக வேண்டும். இல்லையேல் தமிழர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்-படும். அரசியல் வேறுபாடு கடந்து தமிழர் என்ற உணர்வில் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். தமிழர் வேலை வாய்ப்புகள் பறிப்பும் வடமாநிலத்தார் […]

மேலும்....

வரலாறு : பார்ப்பனர்களால் திருடப்பட்ட பழனி மலைக்கோயில்

பழனி முருகன் கோயில் தமிழர்களிடமிருந்து பார்ப்பனர்கள் கைக்கு மாறியது எப்படி? பழனி முருகன் கோயிலில் உள்ள நவபாஷாண உருவச் சிலை சித்தர் போகர் என்பவரால் செய்யப்பட்டது. அவருடைய மரபில் வந்த புலிப்பாணி மற்றும் இதர தமிழ் ஜாதிகளைச் சார்ந்தோர் அக்கோயிலில் பூசை செய்து வந்தனர். முக்கியமாக அவர்கள் சைவ பண்டார இனத்தவர்களாக இருந்தனர். 15ஆம் நூற்றாண்டு காலத்தில் திருமலை நாயக்கருடைய தளவாய் ராமப்பா அய்யன் மற்றும் நாயக்கர் படைப்பிரிவு வடுகப் பள்ளர்கள் பழனிக்கு வந்தனர். ராமப்பா அய்யன் […]

மேலும்....

முகப்புக் கட்டுரை : அறிவியல் அணுகுமுறையே அனைத்திற்கும் தீர்வு!

மஞ்சை வசந்தன் உலகில் உள்ள சிக்கல்கள், அழிவுகள், கேடுகள், இன்னல்கள், இழிவுகள், ஆதிக்கம், ஏற்றத்தாழ்வுகள், மோதல்கள், பாழ்படுத்துதல், அறியாமை, மூடநம்பிக்கைகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதற்குக் காரணம் அறிவின் வழி சிந்திக்காது, மரபு வழி மந்தைகளாய் செயல்படுவதே காரணம் ஆகும்! கடவுள்: கடவுள் நம்பிக்கை பிறந்து வளரும் குழந்தைக்கு எப்படி வருகிறது? அதற்குப் பசி வருவதுபோல, தாகம் எடுப்பதுபோல கடவுள் பற்றிய எண்ணம், தானே வருகிறதா? வருமா? என்றால், இல்லை. அப்படி வராது. பின் எப்படி […]

மேலும்....