அதிகம் நடைபெறும் ஜாதிமறுப்பு மணங்களுக்கு ஆணவக் கொலைகள் சவால்கள்தான்!

அரசன் ‘ஜாதி’ என்னும் கொடிய சமூக நோயை எதிர்த்து சமத்துவ உலகைப் படைக்கும் பணியில் பெரியார் இயக்கம் பணியாற்றி வருகிறது. இப்பணியில் மிகப்பெரிய முன்னேற்றம் நிகழ்ந்துவரும் நிலையில், ஜாதியைக் காட்டி காதல் திருமணம் செய்தவர்கள் கொல்லப்படும் ஆணவப் படுகொலைகள் அவ்வப்போது நடைபெற்று நம்மை வேதனைக்கு உள்ளாக்குகின்றன. ஒப்பீட்டு அளவில் மிகக் குறைந்த அளவில் நடைபெறும் இந்தக் காட்டுமிராண்டித் தனமான நிகழ்வுகளைக் காட்டி, ஜாதி மறுப்புத் திருமணங்களை செய்து கொள்ளும் அனைவரும் கொலை செய்யப்படவது போன்றும், ஜாதி மறுப்பு […]

மேலும்....

நீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழாவில் தலைவர்கள் உணர்ச்சிமிகு முழக்கம்!

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா சென்னை வேப்பேரி பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 20.11.2018 அன்று மாலை  நடைபெற்றது. திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் வரவேற்புரையாற்றினார். கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன் இணைப்புரை வழங்கினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அறிமுகவுரையாற்றினார். நூல் வெளியீடு நீதிக்கட்சி, நீதிக்கட்சித் தலைவர்கள் குறித்த ஆறு நூல்கள்  வெளியிடப்பட்டன. திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர், அழகப்பா […]

மேலும்....

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து

ஆசிரியர் அவர்கள் விழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பதை அறிந்த ஸ்டாலின் அவர்கள், உடனே பெரியார் திடலுக்கு வருகை தந்து, ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஆசிரியரின் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியும் வெளியிட்டார். வரலாற்று ஆவணமாகக் கொள்ளத்தக்க அச்செய்தி. “திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு 86-வது ஆண்டு பிறந்த நாள் இது. 9 வயதில் இருந்தே மேடையில் பேசத் தொடங்கியர். 11 வயதில் சேலம் நீதிக்கட்சி மாநாட்டில் பேசியவர். இளம் வயதில் இவர் […]

மேலும்....

பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், குருதிக்கொடை

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமையப்பெற்றுள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 2.12.2018 இன்று காலை முதல் குருதிக்கொடை சிறப்பு முகாம் மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 86ஆம் பிறந்த நாளை முன்னிட்டு காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குருதிக்கொடை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை  பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. […]

மேலும்....