2019 தேர்தலில் காங்கிரசு தலைமையில் இடதுசாரிகளும் இணைந்து மதவாத ஆட்சியை வீழ்த்துவது அவசியம்!

குஜராத்தில் கடந்த பல ஆண்டுகளாக பா.ஜ.க.வின் செல்வாக்கை தக்க வைத்து தொடர்ந்து 5 முறை ஆட்சியில் இருந்தார் மோடி; பிரதமரானார் 2014 இல். பிரதமர் மோடியின் ‘விகாஸ்’ (வளர்ச்சி) என்பதை நம்பி நாடும், மக்களும் ஏமாந்தனர்! நிலவிய வேலை இல்லாத் திண்டாட்டம், வறுமை, விவசாயிகளின் வேதனை _ தென்னகத்தில் குறிப்பாக தமிழ்நாட்டில் இலங்கை அரசால் பறிக்கப்பட்ட தமிழக மீனவர்தம் வாழ்வுரிமை, ஈழத் தமிழர்களின் இன்னல் _ இவைகளிலிருந்து பெரிய தீர்வு கிடைக்கும் என்று எண்ணி, முந்தைய காங்கிரசு […]

மேலும்....

செயலி

பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் வண்ணங்களைப் பிரித்துணரும் வகையில் “கலர் பிளைண்ட் பால்’’ என்ற புதிய செயலி அய்போனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி போனில் உள்ள கேமரா மூலம் படம் பிடிக்கப்படும் காட்சிகளில் உள்ள பல்வேறு வண்ணங்களைப் பிரித்துக் காட்டுகிறது. கேமராவில் உள்ள பில்டர் மற்றும் ஸ்லைடரைக் கொண்டு வண்ணங்களின் வேறுபாட்டை உணரலாம். இதற்கு முன்னர் பல வண்ணங்களைக் காணமுடியாத பலர், இந்தச் செயலியின் மூலம் முதல் முறையாக வண்ணங்களைத் துல்லியமாகப் பார்க்க முடிவதால் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இயல்பான […]

மேலும்....

குறும்படம்

  அறிவியல் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சிகளால் அந்தந்த காலங்களில் எளிய மக்களின் மிகச் சிறந்த தொடர்பு கருவிகள் வழக்கொழிந்து போய்விடுகின்றன. பெருவாரியான மக்கள் அதை ஏற்றுக் கொண்டாலும் சிலருக்கு உணர்வுமயமான விசயமாக தொடர்ந்து விடுகிறது. வடமாநிலம் சென்ற தமிழ்நாட்டுப் பெண்ணுக்கு ‘கடிதம்’ _ எப்படிப்பட்ட சிந்தனையை; தாக்கத்தை; உணர்வை ஏற்படுத்தியது என்பதை நல்ல கதையம்சத்துடன்; உன்னதமான மனித உணர்வுகளையும் கலந்து பேசுகிறது இந்த ‘இப்படிக்கு’ குறும்படம். சிறந்த இயக்கம் என்று சொல்லத்தக்க அளவில் காட்சிகளும், காதாபாத்திரங்களின் தேர்வும்! நடிப்பும் […]

மேலும்....

நூல் அறிமுகம்

நூல்            :  தெரிந்த வரலாற்றின்                      தெரியாத பக்கங்கள்ஆசிரியர்     : டி.எஸ்.கிருஷ்ணவேல் வெளியீடு:                     6, கோத்தாரி குடியிருப்பு,                     நேதாஜி முதல் தெரு,                     ஜாபர்கான்   பேட்டை,                     சென்னை-83                         பக்கங்கள்: 240   விலை: ரூ.200/- வரலாற்றில் மறைக்கப்பட்ட பல்வேறு செய்திகளை வழங்குகிறது இந்நூல். குறிப்பாக களப்பிரர்கள் குறித்த கட்டுரையில் இந்தியாவின் முதல் குடியாட்சி நடத்தியவர்கள் களப்பிரர்களே என்பதை நிறுவுகிறார் நூலாசிரியர். தோல்சீலைப் போராட்டம், திருப்பதி கோயில் போன்றவை குறித்து […]

மேலும்....

கொட்டும் அருவி

நான்கு சண்டைகள், ஐந்து பாடல்கள், கவர்ச்சி நடனங்கள், அருவெறுப்புச் சிரிப்புகள் இருந்தால்தான் பணத்தைத் திரும்பப் பெற முடியும் என்கிற பொய்த் தோற்றத்தை முறியடித்திருக்கும் அறிமுக இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் மீது வைத்த நம்பிக்கையால் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபுவும், எஸ்.ஆர்.பிரகாஷ்பாபுவும் மிகுந்த துணிச்சலோடு வென்றிருக்கிறார்கள். தாயின் கருவறையின் இருட்டைக் கிழித்துக் கொண்டு இந்தப் பேருலகில் காலடி வைக்கும் எல்லா பெண் குழந்தைகளுக்கும் தன் தந்தையின் நெஞ்சம்தான் எட்டி உதைத்து விளையாடக் கிடைக்கும் முதல் பள்ளித் திடல். அந்த விளையாட்டின் […]

மேலும்....