இடஒதுக்கீடு, சமூகநீதி பற்றிப் பிரதமர் பேசலாமா?

தெலங்கானா மாநிலத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அய்தராபாத்தில் 7.11.2023 அன்று பேசிய பிரதமர் மோடி அவர்கள், “சமூகநீதி கோட்பாட்டில் பா.ஜ.க.வுக்கு மிகவும் உறுதியான ஈடுபாடு உள்ளது. அதனால்தான் தனது அரசு (ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.) தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்களுடன் – பட்டியல் சமூகத்தாருக்கும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கும் எதிலும் முன்னுரிமை கொடுத்து செயலாற்றி வருகிறது’’ என்று கூறியிருக்கிறார். அந்தக் கூட்டத்தின் தலைப்பு என்ன தெரியுமா? “பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சுயமரியாதைக் கூட்டம் (“Self Respect to BC’s”) என்பதாகும். இதற்கான வாதமாக அவர் கூறுகிறார்: […]

மேலும்....

தமிழனே இது கேளாய்!

தமிழா, தமிழா அடையாளம் உனக்கென்ன? எண்ணிப் பார்த்தாயா? ஆரியத்தின் அடி வருடியாய், அரசியலில் அவர்களால் ஏவி விடப்பட்ட ‘மாயமானாக’ ‘பி’ குழுவாக -_ கூலிப் பட்டாளமாய், விபீடண, சுக்ரீவ, அனுமார்களாகி சொந்த இனத்தை _ இன உரிமைகளை மாற்றார் காலடியில் வைத்து சுகம் அனுபவிக்கும் சோற்றால் அடித்த பிண்டமா நீ ? 1. தீபாவளி, 2. வருஷப் பிறப்பு – 60 வருஷ ஆபாச கதை, (ஒரு வருஷமும் தமிழ் இல்லா ஆண்டு ) 3. சரஸ்வதி […]

மேலும்....

தலையங்கம் – ‘‘வரும்… ஆனால் வராது” என்ற ஏமாற்றே மகளிர் 33% இடஒதுக்கீடு! உடன் அமல்படுத்த பி.ஜே.பி.யை தோற்கடிப்பீர்!

கடந்த 13 ஆண்டுகளுக்குமேல், நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளில் மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா – புதிய நாடாளுமன்றக் கட்ட டத்தில் கூடிய முதல் கூட்டத்தில், மக்களவையில் நிறை வேற்றப்பட்டு இருக்கிறது என்பது முழு மகிழ்ச்சிக்கும், உண்மையான வரவேற்புக்குரியதாகவும் அமைய வில்லை என்பதே அப்பட்டமான உண்மையாகும். காரணம், இது மகளிருக்கு உடனடியாகப் பயன்படக் கூடியதாக இல்லை. இதனுள் பொதிந்துள்ள ஆபத்து. அது வருகின்ற பொதுத் தேர்தலில் நடைமுறைக்கு வராது –  […]

மேலும்....

தலையங்கம் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு இடஒதுக்கீட்டின்மீது இவ்வளவு கரிசனம் ஏன்?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்களுக்குத் திடீரென்று ‘‘சமூகநீதி – ஒடுக்கப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மீது திடீர்ப் பற்று, பாசம் பொங்கி வழிய ஆரம்பித்துவிட்டது! ‘‘2000 ஆண்டுகளாக அநீதி இழைக்கப்பட்ட, ஒடுக் கப்பட்ட மக்களான எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி, முதலிய வர்களுக்கு அரசமைப்புச் சட்டப்படி உள்ள சமூகநீதி அவசியம் கொடுக்கப்பட்டே தீரவேண்டும் என்பதாக சண்டப் பிரசண்டம் செய்து ‘ஸனாதனம்’ ஏற்படுத்திய கொடுமையை நேரிடையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக ஒப்புக்கொள்வதாகப் பேசியுள்ளார்! பாரதம், இராமாயணம் கூறும் தர்மம் என்ன? வேட்டுவ […]

மேலும்....

தலையங்கம் – காவிமயமாக்கத் துடிக்கும் ஆளுநருக்கு எதிராய் கடும் போராட்டம் எழும்!

தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணிபுரியும் ஆர்.என். ரவி என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர் தான் பதவி ஏற்கும் போது எடுத்த அரசமைப்புச் சட்டத்தின் 159ஆவது பிரிவின் (கிக்ஷீtவீநீறீமீ) படியான பதவிப் பிரமாணத்திற்கு முற்றிலும் முரணாக, தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மகத்தான மக்களாட்சியான தி.மு.க. ஆட்சிக்கு எதிராக ஒரு போட்டி அரசினை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் நடத்தி, அதிகார துஷ்பிரயோகத்தை அப்பட்டமாகச் செய்து – தமிழ்நாட்டு மக்களின் நலத்திற்கும், நல்வாழ்வுக்கும் விரோதமாக நாளும் செயல்பட்டு வருகிறார்! சண்டித்தனம் செய்வதே – வாடிக்கையா? தமிழ்நாடு […]

மேலும்....