சமத்துவபுரங்களுக்கு எதிரானதே அக்ரஹாரங்கள் அமைக்கும் திட்டம்!

தமிழ்நாடெங்கும் தங்களது பூர்வீக சம்பிரதாயத்தைக் கட்டிக்காக்க பார்ப்பனர்களுக்கென்று ‘‘தமிழகமெங்கும் நமது பூர்வீக அக்ரஹாரம் – வீட்டுமனைகள் மற்றும் கட்டிய இல்லங்கள்’’ என்று பட்டியலிட்டு ‘தினமலரில்‘ (11.8.2024) அரைப்பக்கம் செய்தி – விளம்பரம் வந்துள்ளது. பார்ப்பனர்கள் மாறிவிட்டார்களா? இதனைப் படிக்கும் எவருக்கும் ஒன்று மட்டும் தெளிவாக – திட்டவட்டமாக பார்ப்பனர்கள் யார்? அவர்களின் ஜீவசுபாவம் எத்தகையது என்பது விளங்காமற் போகாது! ‘பார்ப்பனர்கள் திருந்திவிட்டார்கள் – மாறிவிட்டார்கள் – இப்பொழுதெல்லாம் எதற்குப் பார்ப்பனர்பற்றிப் பேச்சு?’ என்று ‘மேதாவிலாசமாக‘ப் பேசும் அன்பர்களுக்கு, […]

மேலும்....

அறிவியலை மூடநம்பிக்கைக் கூடாரமாக்குவதா? வன்மையாகக் கண்டிக்கிறோம்!

நம் நாட்டில் தற்போது மூடநம்பிக்கைகள் ஒரு புதுமுறையில் நிலைக்க, நீடிக்க வைக்கப் பரப்பும் வழிவகைகளை, பழமைச் சக்திகளும், இந்த மூடநம்பிக்கைகளை மூலதனமாக்கிப் பிழைப்பு நடத்தும் கூட்டமும் ஒருங்கிணைந்து இதனை – பெருமுதலாளிகளின் உடைமையாக்கியுள்ளனர். நாளேடுகள், தொலைக்காட்சி மூலம், (அவற்றுக்கு ரேட்டிங் விகிதம் என்ற சாக்கு ஒரு காரணம்) அன்றாடம் அறிவுக்குக் கேடான, அறிவியலுக்கு முரணான செய்திகளைப் பரப்புகின்றனர். ஒன்றியத்தில் உள்ள பா.ஜ.க. கூட்டணி அரசோ, பல திட்டங்களிலும் பல்வேறு துறைகளைக் கையில் வைத்துக்கொண்டு மாணவர்களின் அறிவை நாசமாக்கும் […]

மேலும்....

ஒன்றிய அரசு ஓட்டுப் போட்டவர்களுக்கு மட்டுமா ?

ஒ்ரு நாட்டு அரசின் வரவு – செலவுத் திட்டமான ‘பட்ஜெட்‘ என்பது, வெறும் வரவு – செலவுத் திட்டம் என்பதைத் தாண்டி, அரசின் மூலாதாரத் திட்டம் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படுத்தவும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது! வெறும் சட்டம் – ஒழுங்கு பராமரிப்புதான் ஓர் அரசின் கடமை என்ற தொடக்க கால சிந்தனையைத் தாண்டி, மக்கள்நலம் பேணும் கடமையைச் செய்யும், அரசுகளுக்கு, குறிப்பாக ஜனநாயக முறை அரசுகளில் (Welfare State) நலத் திட்டங்கள்மூலம் செய்யும் மாறுதல் ஏற்பட்டது. […]

மேலும்....

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது !

உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த ஒரு வழக்கு நீதிபதிகள் ஜஸ்டிஸ் பி.ஆர்.கவாய், ஜஸ்டிஸ் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வின்முன் 10.7.2024 அன்று விசாரணைக்கு வந்தது. மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த வழக்கில் – சி.பி.அய். என்ற அமைப்புதான் மேற்கு வங்கத்தில் வழக்கு விசாரணையைத் தொடங்கி நடத்தவேண்டும் என்று முனைப்புடன் செயல்படும் ஒன்றிய அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக, சி.பி.அய். என்ற அமைப்பு முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் ஒன்று […]

மேலும்....

கல்வி நிலையங்களில் ஜாதி உணர்வைத் தடுக்க நீதி அரசர் சந்துரு பரிந்துரைகளை ‘திராவிட மாடல்’ அரசின் முதல்வர் நிறைவேற்ற வேண்டுகிறோம் !

கடந்தாண்டு (2023) ஆகஸ்ட் மாதம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களால் பட்டியலிடப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரண்டு பள்ளிக் குழந்தைகள் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து, மாணவர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், சகோதரத்துவம் காப்பதற்கான வழிமுறைகளை வகுத்திடவும் நமது மாண்புமிகு மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி தமிழ்நாடு அரசால், ஓய்வு பெற்ற நீதிபதி திரு. கே.சந்துரு அவர்களைக் கொண்டு ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் […]

மேலும்....