வலியுறையும் வயநாடு வடுக்கள் ..!- திருப்பத்தூர் ம.கவிதா

ஆலமரத்து ஊஞ்சலிலே ஆடியிருந்த அழகுச் சிட்டு பட்டாம்பூச்சி பிடித்து வந்து பாடிப் பாடி சிரித்த மொட்டு காலையெழுந்து பள்ளி போகும் கனவுகளோடே மாண்டதோ? கண்ணைக் கசக்கி நிற்கையிலே முந்தானையால் முகம் துடைத்து மார்போடு அணைத்த தாயும் மண்ணோடு போனாரோ? தோள் மேலே தூக்கி வைத்து காடு மேடு கழனி காட்டி கைப்பிடித்து வந்த தந்தை கண்மூடிப் போனாரோ? பாட்டி தாத்தா அத்தை மாமன் கூடிப் பிழைத்த பிழைப்பு எல்லாம் கூட்டாய்ச் செத்து மடிந்ததுவோ? ஆக்கி வச்ச சோறு […]

மேலும்....

ஒரு சாமியும் காப்பாத்தலே…- – கவிஞர் ஆன்மன்

மலைகளடர்ந்த ஸ்தலத்தின்டே யானையை உருட்டிப் பந்து செய்ததுபோல் திரண்ட பாறையொன்று உருண்டுவிடாமல் உச்சியில் ஒய்யாரமாய்க் கிடக்கிறது இதுதான் “தங்ஙள்பாறா” பெரிய முஸ்லிம் பெரியவர் அடங்கி இருக்காராக்கும் ஒட்டிய அடுத்த குன்றில் மயிலும் குமரனும் இடது புறம் தேவனின் ஆலயம் மும்மதத்தவரும் பக்தியால் மலையேறும் முக்திபெற்ற ஸ்தலம் பரமபிதாவின் பரம விசுவாசிகள் மொத்தமாய்க் குவிந்து தங்ஙள் பாறாவை தங்கள் பாறாவாக்கிய குறுத்தோலை ஞாயிறன்று அவசரத்திற்கு மலைச்சரிவில் ஒதுங்கிய விசுவாசியொருவர் என்ட அம்மே என்றலறினார் எட்டிப் பார்த்தால் கந்தலாகிக் கிடந்தாளொரு […]

மேலும்....

பெரியாரின் பெருந்தொண்டர் கலைஞர்!-முனைவர் கடவூர் மணிமாறன்

பெரியாரின் பெருந்தொண்டர்; உலகம் போற்றும் பேரறிஞர் அண்ணாவின் அருமைத் தம்பி! சரியாக அரசியலைத் தேர்ந்தே, பொல்லாச் சழக்கினரை மிகச்சாடி மாநி லத்தின் உரிமைக்குக் குரல்கொடுத்த தமிழ்ப்போ ராளி! உதவாத சாதிமத மடமைப் போக்கை விரிவாக எடுத்துரைத்தே குமுக நீதி வென்றிடவே பாடுபட்ட உழைப்புத் தேனீ! முத்தமிழைக் கற்றுணர்ந்த மு.க! நல்லார் முத்துவேலர் அஞ்சுகத்தாய் ஈன்ற ஏந்தல்! முத்தனைய சொற்கொண்டல்! வாழ்நாள் எல்லாம் முரசொலியில் எழுத்துவிதை ஊன்றி வந்த வித்தகராம்! அய்ந்துமுறை தமிழர் நாட்டில் வீறார்ந்த முதலமைச்சர் பொறுப்பை […]

மேலும்....

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி! – முனைவர் கடவூர் மணிமாறன்

டாக்டர் முத்து லட்சுமி அவர்கள் ஊக்க மருந்தென ஒளிர்ந்தார்! போற்றும் முதற்பெண் மருத்துவர் இவரே! பெண்கள் பதவிகள் பெறவே போர்க்கொடி உயர்த்திய மாதர் குலத்தின் மணிவிளக் காவார்! ஜாதி மறுப்பு மணமும் புரிந்தவர்; சென்னை மருத்துவக் கல்லூ ரியிலே பன்னரும் அறுவைப் பண்டுவ முறையில் பயின்ற முதற்பெண் மாணவி இவரே! அயரா வினைஞர்; ஆன்றோர் வியக்கச் சீர்மிகு மாநிலச் சட்ட மன்றில் தேர்வு பெற்றவர் முதற்பெண் மணியாய்! உதவும் குணத்தர்; உயரிய மனத்தர்; பதறிடச் செய்த தேவ […]

மேலும்....

இறகென இருத்தலழகு!

அலையலையாய் அழகுக் குறிப்புகள் அடித்து வரும் வெள்ளமாக வலையொளியில்! ஆற்று நீரில் கலக்கும் சேற்று நீர் போல கூடவே அழகுக் குழப்பங்களும்! சதா பெரும் கவலை பெண்களுக்கு இதே! உப்போ சர்க்கரையோ உறைக்கும் வரை தானே! மீறிச் சேர்த்தால் கரிக்கும் சரி தானே? கைப்பிடிக் கழுத்துக்கு கை கொள்ளா நகைகளா? பட்டுப் புடவை விலையைக் கேட்டால் பத்துக் குடும்பங்கள் வாழலாம் ஆட்டி வைக்கும் அந்தஸ்து மோகம்! தலையென்ன பூக்கூடையா சுமந்து கொண்டே திரிய? பின்னலைக் குறைக்காமல் வேலை […]

மேலும்....