பெண்ணால் முடியும் – பேட்மிண்டனில் சாதனை புரியும் ஆராதயா

ஆறு வயது முதலே விளையாட்டில் சாதனை படைத்து வருகிறார் ஆராதயா. அய்ந்தாம் வகுப்பு படித்து வரும் இவர் சிறந்த வகையில் பேட்மிண்டன் விளையாடி வருகிறார். பள்ளி மாவட்ட மற்றும் மாநில அளவிலான பல போட்டிகளில் பங்கேற்று, 40 கோப்பைகளை வென்றுள்ளார். இந்தியாவிற்காக சர்வதேச அளவில் பல போட்டிகளில் பங்கேற்க வேண்டும்; ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும்; என்று கூறுகிறார் ஆராதயா. “என் அப்பா மருத்துவர் அவினாஷ். பெரும்பாக்கத்தில் உள்ள எங்கள் குடியிருப்பில் அப்பா தினமும் பேட்மிண்டன் […]

மேலும்....

தொழில் முனைவில் சாதிக்கும் சர்மிளா பேகம்!

“பெண்களுக்கு ஏற்படும் இயற்கை நிகழ்வான மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களின் ரசாயனங்களால் உடல்நிலைக் கோளாறுகள், சிக்கல்கள் ஏற்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் இயற்கையான மூலிகையைக் கொண்டு, மூலிகை நாப்கின்களைத் தயார் செய்து சாதித்து வருகிறார் தோழர் சர்மிளா பேகம். “மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர் உடல் நலமின்றி இருந்தார். அதுக்குக் காரணம் அவர் பயன்படுத்திய, ரசாயனங்களால் ஆன நாப்கின்கள் தான் என்று தெரிந்தது. அதற்கு மாற்றாக பருத்தி மற்றும் மூலிகை நாப்கின்கள் பயன்படுத்திய […]

மேலும்....

இமயமலை ஏறி சாதித்த கவுசல்யா

மலையேறுதல் என்பது உடல் மற்றும் சிந்தனை வளர்ச்சியின் ஆரோக்கியம் மற்றும் தன்னம்பிக்கையை வலிமை யாக்கும் சிறந்த பயிற்சி ஆகும். மலை ஏறுதல் ‘டிரக்கிங்’. இதற்கென தனியாக வழித்தடங்கள் உள்ளன. மலை ஏறுவதை பலர் பொழுது போக்காகவும், செய்து வருகின்றனர். சிலர் பயிற்சியாகச் செய்கின்றனர். மலையேறுதலில் பல இடங்களுக்குச் சென்று வருவதைத் தனது வழக்கமாகக் கொண்டுள்ளார் தோழர் கவுசல்யாதேவி. கவுசல்யா ஊட்டி, பெங்களூரு, கருநாடகா பகுதியில் உள்ள முக்கொம்பு, இமாச்சலம் எனப் பல பகுதிகளுக்குச் சென்று அங்கு டிரக்கிங் […]

மேலும்....

பெண்ணால் முடியும்

வனப் பகுதியில் போர் புரியும் ‘கோப்ரா’ ஜங்கிள் வாரியஸ் இரும்புப் பெண்! ‘மத்திய ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ்’(CRPF) அமைப்பின் ஒரு பிரிவுதான் “கோப்ரா’’ (Commando Battalion for Resolute Action) Cobra என அழைக்கப்படுகிறது. இந்தப் பிரிவு, வனப் பகுதிகளில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற் காகவே உருவாக்கப்பட்ட கொரில்லா அமைப்பு ஆகும். மாவோ தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடுவதுதான் இப்பிரிவின் சிறப்பு ஆகும். இப்பிரிவில் பணிபுரியும் வீரர்கள் ‘ஜங்கிள் வாரியர்ஸ்(Jungle warriors) என அழைக்கப்படுகிறார்கள். இப்பிரிவில் பணியாற்றும் இளம் வயதுப் […]

மேலும்....

பெண்ணால் முடியும்: குடும்ப பாரம் சுமக்கும் லோகேஸ்வரி!

எத்தனை இடர்வரினும், இழப்பு வரினும் அவற்றை எதிர்கொள்ள பெண்ணால் முடியும் என்பதற்கு லோகேஸ்வரி ஓர் எடுத்துக்காட்டு. ஆணே சுமக்க முடியாத குடும்ப பாரத்தைச் சுமக்கும் அவரே கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார். “நாங்கள் எங்கள் தந்தை சேரன் இறந்த பிறகு, அவர் செய்துகொண்டிருந்த பால் வியாபாரத் தொழிலை தொடர் ஓட்டமாக கையில் எடுத்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறோம். நாங்க பொறந்து, வளர்ந்தது எல்லாம் எருக்கலக்கோட்டைங்கிற கிராமம். அஞ்சு பொம்பளப்புள்ளைங்க, நான்தான் மூத்தவ. அப்பாவுக்கு பால் வியாபாரம்தான் தொழில், எம்_80 வண்டியில […]

மேலும்....