பெண்ணால் முடியும்! – கட்டுகளைத் தகர்த்து கால்பந்தில் சாதிப்பீர்!

– முனைவர் வா.நேரு உலக மகளிர் கால்பந்துப் போட்டி 2023, ஜூலை 20ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 20ஆம் தேதி முடிந்திருக்கிறது. உலக கால்பந்து சம்மேளனம் (திமிதிகி) சார்பில் பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் 2023-ஆம் ஆண்டின் உலகக்கோப்பைத் தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன. அதில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா நாடும், நியூசிலாந்து நாடும் இணைந்து இந்தப் போட்டிகளை நடத்தினர். இந்தப் போட்டி உலகத்தின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டிற்கான உலக […]

மேலும்....

பெண்ணால் முடியும் – வன உயிரின புகைப்படக் கலைஞர்

திவ்ய பாரதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் உள்ள மலையபாளையத்தை சேர்ந்தவர் “வன உயிரின போட்டோகிராபர்’’ திவ்ய பாரதி. இவரின் அப்பா ஒரு தொழிலதிபர், அம்மா இல்ல நிருவாகியாவார். அண்மையில்தான் இவருக்குத் திருமணமாகியுள்ளது. கணவர் தொழில்(முனைவர்) அதிபர், ஆங்கில இலக்கியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சிறு வயது முதலே ஒளிப்படங்கள் (Photos) எடுப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். இவர் குடும்பத்தோடு அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கம். அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதிகளுக்குள் பலமுறை […]

மேலும்....

பெண்ணால் முடியும் – விண்வெளியில் பறக்க பயிற்சிபெறும்

உதயகீர்த்திகா குழந்தைப் பருவ வளர்ச்சி நிலைகளில், குழந்தைக்கு நிலவைக் காட்டி சோறு ஊட்டுவார் அன்னை. நிலவின்மீது ஓர் ஈர்ப்பு அனைவருக்குமே உருவாவது இயற்கைதான். சகபள்ளி மாணவர்கள் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் இவர் ராக்கெட், ஏரோபிளேன்ல பறக்கணும்னு தனது சிந்தனைச்சிறகை விரித்து எதிர்காலத்தில் சாத்தியமாக்கியுள்ளார், சாமானிய குடும்பப் பின்னணியைக் கொண்ட சாதனைப் பெண் உதயகீர்த்திகா. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பெண்ணுரிமைச் சிந்தனை, பெண் ஆண் சமம். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் எனும் சிந்தனையை […]

மேலும்....

108 ஆம்புலன்ஸ் சேவையின் முதல் பெண் ஓட்டுநர்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தோழர் வீரலட்சுமி. இவர் சில மலைக் கிராமங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டும் ஓட்டுநராகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இந்திய ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களில் இயக்கப்படும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் (எமர்ஜென்சி பைலட்) முதல் பெண் பைலட் தோழர் வீரலட்சுமி ஆவார். தோழர் வீரலட்சுமி திருமணத்திற்குப் பிறகு, சென்னையில் குடும்பத்துடன் குடியேறினார். இவரின் கணவரும் கார் ஓட்டுநராக இருக்கிறார். இவருக்கு சிறு வயதிலிருந்தே சுயமாகச் […]

மேலும்....

சிலம்பாட்டத்தில் சாதிக்கும் சிறுமி!

குழந்தைப் பருவத்தில் எந்தச் சூழலில் வளர்கின்றோமோ, அதைப் போலவே எதிர்காலம் அமையும். வளரும் சூழ்நிலைதான் ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், கற்கும் பள்ளிச் சூழல், வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்று பல காரணங்கள் ஒருவரது ஆளுமையைத் தீர்மானிக்கின்றன. தன் தாத்தா பாட்டி இருவரும் சிலம்பாட்ட பயிற்சி எடுப்பதைப் பார்த்த இளம் வீராங்கனை நட்சத்திராவுக்கு சிலம்பாட்டத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. சிலம்பாட்டத்தில் சாதனை படைத்து வரும் நட்சத்திரா குறித்து அவரின் தாய் நர்மதா, “என் அப்பா […]

மேலும்....