மனமின்றி அமையாது உலகு! (9) ‘மெலன்கோலியா’

மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் கி.மு.அய்ந்தாம் நூற்றாண்டில் ‘மெலன்கோலியா’ என்ற வார்த்தையை  ஹிப்போகிரேட்ஸ் முதன்முதலில் பயன்படுத்துகிறார். அதாவது மனிதனின் பண்புகளை நான்காக அவர் வகைப்படுத்தும் போது, அதில் ஒரு வகையை ‘மெலன்கோலியா’ என்று அழைக்கிறார். ‘மெலன்கோலிக் பண்புகளைக் கொண்ட மனிதர்கள் எப்போதும் உற்சாகம் குறைந்தவர்களாக, ஏதேனும் ஒரு சோகத்தைச் சுமந்து திரிபவர்களாக, வாழ்க்கையின் மீது எப்போதும் எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாக, மிகச் சில நெருங்கிய நண்பர்களையே கொண்டவர்களாக, எப்போதும் தனிமையையே விரும்புபவர்களாக, எதன் மீதும் நாட்டம் […]

மேலும்....

மனச்சிதைவு நோய் (Schizophrenia)

மனமின்றி அமையாது உலகு! (8) எண்ணங்களில் வரும் நோய்களில் முதன்மையானது மனச்சிதைவு நோய். மேலும் அனைத்து மனநோய்களை விட தீவிரத் தன்மை வாய்ந்ததும் இந்த மனச்சிதைவு நோயே. சாலைகளில் ஆதரவின்றிச் சுற்றித் திரிபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். மனநோய் என நாம் நினைத்துக்கொண்டிருக்கும் தனியாகப் பேசுவது, சிரிப்பது போன்ற தன்மைகளெல்லாம் இந்த நோயின் குணாதிசயங்களே. எமில் கிரெப்பலின் என்ற ஃபிரெஞ்ச் நரம்பியல் நோய் நிபுணர் 1800களிலேயே இந்த நோய் தொடர்பான குறிப்பொன்றை எழுதியிருக்கிறார். ‘Dementia Precox’ […]

மேலும்....

எத்தனை விதமான மனநோய்கள் இருக்கின்றன?- மனமின்றி அமையாது உலகு!(7)

மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர் மனநோய்களைப் பற்றி இங்கிருக்கும் பொதுவான கருத்து – “அனைத்து மனநோய்களும் ஒன்று’ என்பதுதான். “அய்யய்யோ, என் பையனுக்கு மனநோயா? வாழ்க்கை முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டியிருக்குமா? அவனால் அவன இனிமே பாத்துக்கவே முடியாதா?” என்று சொல்வது தான் மனநோய். இப்படிச் சொன்னால் உடனடியாக வரும் எதிர்வினை. அப்படியெல்லாம் அச்சப்படத் தேவையில்லை. நவீன மனநலக் குறிப்பேடுகளின்படி கிட்டத்தட்ட அய்ந்நூறுக்கும் மேற்பட்ட மனநோய்கள் இன்று இருக்கின்றன. அதில் இரண்டு அல்லது மூன்று மனநோய்களே […]

மேலும்....

மனமின்றி அமையாது உலகு (4)

மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் மனநல மருத்துவர் இரண்டு வகையான உளவியல் பிரச்சினையில் சிக்கி நான் ஊசலாடியிருக்கிறேன். கேள்வி: 1. அறிஞர் அண்ணா எழுதிய ‘சாது’ சிறுகதையில் வருவது போல முதலாளியிடம் திட்டு வாங்கியதில் உள்ளத்தில் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, அதைத் தன் மனைவியிடம் காட்டி ஆசுவாசப்படும் தோட்டக்காரனின் மனைவி அவன் செய்யும் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டு தன் கோபத்துக்கு வடிகாலாய் குழாயடிச்சண்டையில் ஈடுபடுவாள். உள்ளத்தில் உணர்வெழுச்சிகளைப் புதைத்து அடக்கி வைத்து அதனை சம்பந்தமற்றவர்களிடம் அல்லது கோபம் […]

மேலும்....

மனமின்றி அமையாது உலகு!மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர்

மனதின் பண்புகள் மனம் என்பது ஒரு செயல்பாட்டு அலகு (Functioning Unit). அது மூளையில் உள்ளீடு செய்யப்பட்டிருக்கிறது என்று பார்த்தோம். மனதின் பண்புகள் என்ன? அதன் செயல்பாடுகள் என்ன? மனம் என்ற ஒன்று ஏன் நமக்கு இருக்கிறது? அதனால் என்ன பயன்கள் என்று பார்ப்போம். ஏனென்றால் இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டால். தான் மனம் நலமாக இருப்பது என்றால் என்ன? மனம் நோய்மையுற்றிருப்பது என்றால் என்ன? என்பதையெல்லாம் புரிந்து கொள்ள முடியும். மனதில் மூன்று பரிமாணங்கள் உள்ளன: சிந்தனைகள் […]

மேலும்....