“ஹிந்தி தேவையில்லை!” சுந்தர்பிச்சை அறிவிப்பு…

தமிழர் ‘சுந்தர்பிச்சை’யின் ஆண்டு வருமானம் 176 கோடி ரூபாய்… அவருக்குத் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே தெரியும்… ஹிந்தி மருந்துக்கும் தெரியாது… ஹிந்தி தெரிந்திருந்தால் மும்பையில் அதிகபட்சமாக மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளத்தில் -_ ஏதோ ஒரு ஏனோ -தானோ அடிமை வேலையில் இருந்து கொண்டு பட்ஜெட் வாழ்க்கை வாழ்ந்திருப்பார் என்பதே உண்மை… ஹிந்தியில் கேள்வி கேட்ட ஒரு செய்தியாளரைப் பார்த்து, சுந்தர்பிச்சை கூறுகிறார்: “எனக்கு ஹிந்தி தெரியாது; கேள்வியைத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே கேளுங்கள்” […]

மேலும்....

அன்னை மணியம்மையார் பிறப்பு : 10.3.1920

“மகளிர் குல மணிவிளக்காகவும் அறிவியக்கத்தின் ஒளிச்சுடராகவும் தெளிந்த சிந்தனையும் திடமான நெஞ்சமும் கொண்ட வீராங்கனையாகவும் விளங்கியவர்கள் அன்னை மணியம்மையார் அவர்கள். பெரியாருக்குத் துணையாக இருந்து தன்மான இயக்கத்தையும், திராவிடர் கழகத்தையும், வளர்த்தார்கள் என்பது மட்டுமல்ல, பெரியாருக்குப் பிறகு அவரது கொள்கைகளைக் காக்க ஓயாது உழைத்தார்கள். ஓய்வில்லாத பணிதான் அவரது உயிரையும் கொள்ளை கொண்டுவிட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.” – டாக்டர் கலைஞர் (முரசொலி 19.3.1978)

மேலும்....

டாக்டர் டி.எம். நாயர் பிறப்பு – 15.1.1868

  திராவிட இயக்கச் சிற்பிகளுள் முன்னோடியாய்த் திகழ்ந்தவர். தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தை அமைத்த இவரை, திராவிட இயக்கத்தின் ‘இதயம்’ எனக் கூறுவதே மிகவும் பொருத்தமானது. தனது உரையை “எழு, விழி! இல்லையெனில் எப்போதும் வீழ்ந்துகிட!’ என்றுதான் முடிப்பார். சமூகநீதியைக் காக்கப் போராடியவர். “ஷஸ்டிஸ்’ இதழின் பதிப்பாசிரியர். “திராவிட லெனின்’ என்று தந்தை பெரியாரால் போற்றப்பட்டவர்.

மேலும்....

வெள்ளப்பேரிடர் துயர் துடைக்க பெரியார் அறக்கட்டளை உதவி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம் மற்றும் பெரியார் கல்வி நிறுவனப் பணியாளர்கள் சார்பில் 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் உள்ளனர்.(11.12.2023)

மேலும்....