உணவே மருந்து : காய், கனிகளின் தோல் கழிவுகள் அல்ல! நோய் தீர்க்கும் நுண் சத்துடையவை!

மாதுளம் பழத்தோல் மாதுளம் பழ ஓடுகளை நன்கு காயவைத்து இடித்து மிக்சியில் அரைத்து சலித்து வைத்துக் கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்போது 1 தேக்கரண்டி (Teaspoon) பொடியை 1 டம்ளர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்துக் குடித்தால் உடனே சரியாகும். வாழைப் பழத்தோல் வாழைப்பழத்தை உரித்த பின் கடினமான தோலுக்கு அடியில் பழத்தை ஒட்டி தோல் இருக்கும். இதில் உள்ள மெக்னீசியம் சத்து உடல் நலத்திற்கு உகந்தது. எனவே, வாழைப்பழத் தோலில் உட்பகுதியை பற்களால் சுரண்டி மென்று […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : புலவர் நன்னனின் அகமும் புறமும்

  நூல்    : புலவர் நன்னனின் அகமும் புறமும் வெளியீடு        : ‘நன்னன் குடி’, ‘சிறுகுடி’,                    22, முதல் தெரு, அரங்கராசபுரம்,                    சைதாப்பேட்டை, சென்னை_600 015                     தொலைபேசி: 044_2235 0193                     கைபேசி: 98845 50166, 98406 59157  நன்கொடை: ரூ.400.  இணையம்:  www.maanannan.in   அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே… அண்ணாவும் பெரியாரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே பேசினார்கள். அப்பேச்சு என்னைத் தெளிவுள்ளவனாக ஆக்கியது. பெரியாரின் பேச்சும், அண்ணாவின் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு : மனிதநேயமற்ற மரபைக் காக்க சாட்சி சொன்ன உ.வே.சா

அ.ப. நடராசன், உடுமலை    பழைய மரபு அந்தக் காலத்தில் பாண்டிய நாட்டில் கோவில்களில் நாடார்கள் புகுவது இல்லை. எத்தனையோ நாடார்கள் நல்ல பழக்கங்களை உடையவர்களாகவும், சிவ பக்தியில் சிறந்தவர்களாகவும் இருந்தார்கள். என்றாலும், நாடார் என்னும் ஜாதியை எண்ணி, அவர்களைக் கோவிலுக்குள் விடுகிற பழக்கம் இல்லாமல் இருந்தது. இராமநாதபுரம் ஜமீனைச் சேர்ந்த கிராமம் கமுதி. அங்கே மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் இருக்கிறது. நாடார்கள் அந்தக் கோவிலுக்குள் புகுந்தார்கள். மற்றவர்கள் அதைத் தடுத்தார்கள். இதனால் ஒரு கலகமே உண்டாயிற்று. […]

மேலும்....

சிறுகதை : தும்மல்!

ஆன்டன் செகாவ்  [“எங்கெல்லாம் அற்பத்தனங்கள் இருக்கின்றனவோ, அவற்றை ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தினார் ஆன்டன் செகாவ்’’ என்றார் மாக்சிம் கார்க்கி. திடீரென வந்த ஒரு தும்மல்தான் இக்கதையின் கரு. அத்தும்மலின் விளைவுகள் ஒரு பெரும் புரட்சிக்கு வித்திட்டது. ரஷ்ய மொழியில் எழுதப்பட்ட இந்தச் சிறுகதை மொழி பெயர்ப்பு இது.] அருமையான ஓர் இரவில் அருமையான எழுத்தர் இவான் திமீத்ரிவிச் செர்வியாக்கவ்* நாடகக் கூடத்தில் இரண்டாவது வரிசையில் அமர்ந்து, காட்சிக் கண்ணாடியின் துணை கொண்டு லிமீs சிறீஷீநீலீமீs பீமீ சிஷீக்ஷீஸீமீஸ்வீறீறீமீ நாடகம் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (42) : பெரியார் – இந்தியருக்கு எதிரானவரா? அம்பேத்கர் – இந்திய கலாச்சார விரும்பியா?

 நேயன் ஈ.வெ.ரா. இந்தியர்களுக்கு எதிரானவர், அம்பேத்கர் இந்திய கலாச்சார ஒற்றுமையில் நம்பிக்கையுடையவர். இது அந்தப் பித்தலாட்டப் பேர்வழியின் நான்காவது கண்டுபிடிப்பு (சிண்டுமுடிப்பு) முதலில் இவர் இந்தியக் கலாச்சாரம் என்ன என்பதை விளக்குவாரா? இதற்கு அவர் சொல்லும் காரணங்கள்: இந்தியாவை இனவழியாக, மொழிவழியாகப் பிரிப்பதை ஆதரித்தவர் ஈ.வெ.ரா. ஆனால், இந்தியாவின் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டவர் அம்பேத்கர். ஆன்மிகக் கலாச்சார அடிப்படையில் இந்தியாவை அரசியல் ரீதியாக ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை அம்பேத்கர் உணர்ந்திருந்தார் என்று எந்த ஆதாரமும் அற்ற ஒரு […]

மேலும்....